முருக அடியார்களின் மண்டூர் திருத்தலத்தினை நோக்கிய பாதயாத்திரை.


(தில்லை)
இலங்கைத்திருநாட்டின் சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும் தில்லை மண்டூர் முருகள் ஆலயத்தின் வருடாந்த திருவிழா மிகவும்
சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக இந்து அடியார்கள் காரைதீவில் இருந்து ஆரம்பித்த பாதயாத்திரை கல்முனை பிரதான நகரை அடைந்து கல்முனையில் உள்ள அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தை வந்து தரிசனம் செய்து அங்கிருந்து பஜனைப்பாடல்கள் பாடி நூற்றுக்கணக்கான அடியார்கள் தில்லை மண்டூர் முருகன் ஆலயத்தினை நோக்கிச்பாதயாத்திரையை மேற்கொண்டிருந்தார்கள்.

இப்பாதயாத்திரையில் பல ஊர்களில் இருந்தும் பல முருகன் பக்தர்கள் கழந்து கொண்டு சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.












.