கருமலையூற்று பள்ளிவாசல் இடிப்பும் அரசியல் தலைமைகளின் தவறும்

நானூறு வருடம் பழை­மை­ வாய்ந்த திரு­கோ­ண­மலை வெள்­ளை­மணல் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் ஞாயிற்­றுக்­கி­ழமை காலை இடித்துத் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது. தற்­பொ­ழுது படை­யி­னரின் கட்­டுப்­பாட்­டுப்­ப­கு­திக்குள் இருந்து வரும் இந்தப் பள்­ளி­வாசல் தகர்க்­கப்­பட்­டமை நாச­கார செயல் என்று பள்ளி நிர்­வாகம் கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.
 
மூன்று தினங்­க­ளாக பள்­ளி­வாசல் அமைந்­துள்ள பகு­தியில் கடும் மழை பெய்துள்­ளது. இந்த மழை பெய்த நேரத்தைப் பயன்­ப­டுத்தி கன­ரக இயந்­தி­ரத்தின் மூலம் இந்தப் பள்­ளி­வாசல் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது . தற்­போது பள்­ளி­வாசல் இருந்த இடமே தெரி­யாத நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

2009 ஆம் ஆண்டு இந்தப் பள்­ளி­வாசல் படை­யி­னரின் கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டதன் கார­ண­மாக அப்­ப­கு­தியில் வாழ்ந்த 350 குடும்­பங்கள் வீடு­வா­சல்­களை இழந்து நிர்க்­க­தி­யாக்­கப்­பட்­டன. இங்கு வாழ்ந்த மக்கள் நானூறு வரு­டங்­க­ளுக்கு மேல் குடி­யி­ருந்­த­வர்­க­ளாவர். கரு­ம­லை­யூற்று ஜும்மா பள்­ளி­வாசல் 1885 ஆம் ஆண்டு நிறு­வப்­பட்­டது. 1985 ஆம் ஆண்டு மீண்டும் அது புன­ர­மைக்­கப்­பட்­டது.. 2007 ஆம் ஆண்டு தற்­போ­தைய கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஜீப் ஏ மஜீத் அமைச்­ச­ராக இருந்த வேளையில் மீலா நபி நிதி­யி­லி­ருந்து 5 இலட்­சத்து 80 ஆயிரம் ஒதுக்­கி­ய­தை­ய­டுத்து மீண்டும் இந்தப் பள்­ளி­வாசல் புன­ர­மைக்­கப்­பட்­டி­ருந்­தது. .
 
இந்த நிலை­யி­லேயே பழை­மை­ வாய்ந்த இந்தப் பள்­ளி­வா­ச­லா­னது இடித்து தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது.. பள்­ளி­வாசல் இடிக்­கப்­பட்­டமை தொடர்பில் இதன் நிர்­வா­கத்­தினர் கருத்துத் தெரி­விக்­கையில் ஞாயிற்­றுக்­கிழமை அதி­காலை கன­ரக இயந்­தி­ர­மொன்றின் சத்தம் பள்­ளி­வா­சலை அண்­டி­ய­ப­கு­தியில் கேட்­ட­போது என்ன நடை­பெ­று­கின்­றது என்­பதை அறிய மக்கள் முயற்சி செய்­தார்கள். ஆனால் படை­யினர் அதற்கு அனு­ம­திக்­க­வில்லை. கடல் பிர­தே­சத்தை அண்­டிய பகுதி என்­பதால் தோணியொன்றை எடுத்து கடல் வழி­யாக சென்று பார்த்­த­போது பள்­ளி­வாசல் கன­ரக இயந்­தி­ர­மொன்றை பயன்­ப­டுத்தி தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டதை கண்டோம் என்று தெரி­வித்­துள்­ளனர்.
 
இதி­லி­ருந்து பழை­மை­வாய்ந்த பள்­ளி­வா­சலை படை­யி­னரே தகர்த்­துள்­ளமை தெளிவா­கின்­றது. கடந்த சில வரு­டங்­க­ளா­கவே பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­ப­டு­கின்ற சம்­ப­வங்கள் தொடர்ந்த வண்­ண­முள்­ளன. தம்­புள்­ளையில் அமைந்­துள்ள பள்­ளி­வாசல் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் ஆரம்­பித்த இத்­த­கைய வன்­மு­றைச்­சம்­பவம் கொழும்பு, கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் வரை தொடர்ந்­தது. வீதி அபி­வி­ருத்தி என்ற பெயரில் தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அகற்­று­வ­தற்கு தொடர்ந்தும் முயற்­சிகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்­த­நி­லையில் படை­யி­னரின் கட்­டுப்­பாட்­டுப்­ப­கு­தியில் அமைந்­தி­ருந்த நானூறு வருடம் பழைமை வாய்ந்த பள்­ளி­வாசல் தகர்க்­கப்­பட்­டுள்­ளமை முஸ்லிம் மக்கள் மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை பெரும் கவ­லை­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.
 
இந்தப் பள்­ளி­வாசல் இடித்து தரை­மட்­ட­மாக்­கப்­பட்ட சம்­ப­வத்தை ஆளும் கட்­சி­யி­லுள்ள முஸ்லிம் அமைச்­சர்கள் மற்றும் எம்.பி.க்களும் கண்­டித்­துள்­ளனர். கரு­ம­லை­யூற்றுப் பள்­ளி­வா­சலை மீள அமைத்துத் தரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மென்று ஐ.ம.சு.மு. வின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஊட­கத்­துறை மேற்­பார்வை எம்.பி. யுமான ஏ.எச்.எம். அஸ்வர் கோரிக்கை விடுத்­துள்ளார்.
 
இந்த விடயம் குறித்து பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ மற்றும் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ ஆகி­யோரின் கவ­னத்­திற்கும் தான் கொண்­டு­வந்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்­தி­ருக்­கின்றார். இதேபோல் பள்­ளி­வாசல் இடித்து தரை­மட்­ட­மாக்­கப்­பட்­ட­மையை முன்னாள் அமைச்­சரும் கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான எம்.எஸ்.என். அமீர் அலி கண்­டித்­துள்ளார். மூன்று மாதங்­க­ளுக்­குள்ளே இந்தப் பள்­ளி­வா­சலை மீட்­டெ­டுத்து அந்தப் பிர­தே­சத்தின் வர­லாற்று முக்­கி­யத்­து­வத்தை பாது­காப்பேன் என்று 2012 என்று கூறிய முத­ல­மைச்சர் நஜீப் ஏ. மஜீத் அந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­றாமல் விட்­ட­மை­யினால் பள்­ளி­வாசல் உடைக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான முழுப்­பொ­றுப்­பையும் கிழக்கு மாகாண முத­ல­மைச்­சரே ஏற்­க­வேண்டும் என்று அவர் தெரி­வித்­துள்ளார்..
 
இந்தப் பள்­ளி­வா­சலை படை­யி­ன­ரிடம் இருந்து விடு­வித்து பொது­மக்­களின் பாவ­னைக்கு விட­வேண்டும் என்று கிழக்கு மாகா­ண­ச­பையில் 2012 ஆம் ஆண்டு நவம்­பரில் ஆளும் கட்சி உறுப்­பினர் அமீர் அலி­யினால் பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்டு அது ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. இந்த பிரே­ர­ணையில் உரை­யாற்­றும்­போதே மூன்று மாத­கா­லத்­திற்குள் பள்­ளி­வா­சலை விடு­வித்து தரு­வ­தாக முத­ல­மைச்சர் நஜீப் ஏ மஜீத் வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்தார்.
 
இந்த உறு­தி­மொழி நிறை­வேற்­றப்­ப­டாமை குறித்து உறுப்­பினர் அமீர் அலி யைப் போல் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் கிழக்கு மாகாண உறுப்­பினர் இம்ரான் மஹ்­ரூப்பும் கண்­டனம் தெரி­வித்­துள்ளார். பள்­ளி­வாசல் உடைப்­புக்­கான முழுப்­பொ­றுப்­பையும் முத­ல­மைச்­சரே ஏற்­க­வேண்டும். அவர் வழங்­கிய வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்தால் பள்­ளி­வா­ச­லுக்கு இன்­றைய நிலை ஏற்­பட்­டி­ருக்­காது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.
 
பள்­ளி­வாசல் இடித்து தரை­மட்­ட­மாக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து முஸ்லிம் காங்­கி­ரஸின் திரு­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எஸ். தௌபீக் திரு­கோ­ண­மலை மாவட்ட இரா­ணுவ கட்­ட­ளைத்­த­ள­ப­தியை நேற்று முன்­தினம் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­துடன் இடிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சலை புன­ர­மைப்­ப­தோடு அங்கு முஸ்­லிம்கள் தொழுகை நடத்­து­வ­தற்கும் அனு­மதி வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று கோரி­யுள்ளார்.
 
இவ்­வாறு பள்­ளி­வாசல் படை­யி­னரால் இடித்து அழிக்­கப்­பட்­டுள்­ள­போ­திலும் அதனை அவர்கள் மறுத்­தி­ருக்­கின்­றனர். நேற்று முன்­தினம் கரு­ம­லை­யூற்று உயர் பாது­காப்பு வல­யத்­திற்கு சென்ற கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஜீப் ஏ மஜீத் இடிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சலை நேரில் சென்று பார்­வை­யிட்டார். பாழ­டைந்த நிலையில் காணப்­பட்ட பள்­ளி­வாசல் கட்­டடம் கடந்த சில நாட்­க­ளாக காற்­றுடன் கூடிய மழை பெய்­ததன் கார­ண­மா­கவே இடிந்து விழுந்­துள்­ள­தாக இரா­ணு­வத்­தி­னரால் முத­ல­மைச்­ச­ருக்கு விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. 
 
இது குறித்து முத­ல­மைச்­ச­ரிடம் ஊடகம் ஒன்று கேள்­வி­யெ­ழுப்­பிய போது உண்­மை­யி­லேயே அது தானா­கத்தான் விழுந்­தி­ருக்கும் என்று அவர் பதி­ல­ளித்­துள்ளார். பள்­ளி­வாசல் இடித்து அழிக்­கப்­பட்­டுள்­ள­தாக நிர்­வா­கமும் ஏனைய முஸ்லிம் தலை­மை­களும் கூறு­கின்ற நிலையில் முத­ல­மைச்சர் நஜீப் ஏ மஜீத் இரா­ணு­வத்­தி­னரின் கூற்­றுக்கு தலை­சாய்த்து கருத்து தெரி­வித்­துள்­ள­மையும் உண்மை நிலை எவ்­வாறு மழுங்­க­டிக்­கப்­ப­டு­கின்­றது என்­ப­தற்கு சான்­றாக அமைந்­துள்­ளது.
 
வடக்கு கிழக்கில் படை­யி­னரால் அதியுயர்­பா­து­காப்பு வல­யங்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பகு­தி­களில் உள்­ள­வீ­டுகள், மற்றும் ஆல­யங்கள் என்­ப­வற்றை படை­யினர் தமது தேவை­க­ளுக்­காக இடித்­துள்­ளமை வர­லா­றா­கவே உள்­ளது. வலி­காமம் வடக்குப் பகு­தியில் 6300 ஏக்கர் காணி­களை சுவீ­க­ரித்­துள்ள படை­யினர் அங்கு அமைந்­தி­ருந்த கோவில்கள், மற்றும் வீடுகள், என்­ப­வற்றை இடித்து தரை­மட்­ட­மாக்­கி­ய­தாக குற்றம் சாட்­டப்­பட்­டி­ருந்­தது. இதே­போன்றே இந்தப் பள்­ளி­வாசல் உடைப்புச் சம்­ப­வமும் இடம்­பெற்­றி­ருக்­கலாம் என்ற கருத்து மேலோங்­கி­யுள்­ளது.
தற்­போ­தைய நிலையில் பழைமை வாய்ந்த பள்­ளி­வாசல் இடித்து அழிக்­கப்­பட்டு விட்­டது. இந்தப் பள்­ளி­வா­ச­லையும் இப்­ப­கு­தியில் மக்கள் வாழ்ந்து வந்த பகுதியையும் படையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முஸ்லிம் தலைமைகள் ஏற்கனவே மீட்டிருந்தால் இவ்வாறான துரதிருஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றிருக்கமாட்டாது. ஆனாலும் அவ்வாறு படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள பகுதிகளை மீட்பதென்பதும் இலகுவான காரியமில்லை.
 
கிழக்கு மாகாணசபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியிலேயே உள்ளது. இதன் முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச்சேர்ந்த ஒருவரே பதவி வகித்து வருகின்றார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தே கிழக்கு மாகாண ஆட்சியினை நடத்திவருகின்றன. இத்தகைய நிலையில் பழைமை வாய்ந்த பள்ளிவாசலை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. எனவே இடிக்கப்பட்ட பள்ளிவாசலை புனரமைத்து மக்களின் பாவனைக்கு விடுவதற்கான நடவடிக்கைகளையாவது இனியாவது இந்த அரசியல்வாதிகள் செய்தால் நல்லது.