மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள மொழி கற்பிக்கும் நிகழ்வு



(சிவம்)

மட்டக்களப்பு மாவட்ட அரச அலுவலகங்களில் பணிபுரியும் தமிழ் உத்தியோகத்தர்களுக்கான சிங்கள மொழி கற்பிக்கும் ஆரம்ப நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சின் ஆலோசனைக்கமைய தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தினால் நடாத்தப்படும் 12 நாட்கள் கொண்ட இப்பயிற்சியில் 200 உத்தியோகத்தர்கள் பங்குபற்றியதாக நிறுவகத்தின் உதவிப் பணிப்பாளர் ஜி. கோபிநாத் தெரிவித்தார்.


2012 தேசத்திற்கு மகுடத்தின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதேச செயலகப் பரிவுகளில் இதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும்,

இலங்கையில் இதுவரையில் தமிழ் ஊழியர்களுக்காக 200 சிங்கள பயிற்சி வகுப்புக்களும் மற்றும் சிங்கள ஊழியர்களுக்காக 700 தமிழ் பயிற்சி வகுப்புக்களுமாக 900 வகுப்புக்கள் நடாத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தினைச் சேர்ந்த எஸ். அல்பட், லீதா பிரியந்த, எஸ். ஏம். சமரசிங்க ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர்.