பட்டாபுரத்தில் அனர்த்த ஒத்திகை

(சக்தி)

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அக்ரெட், எனும் அரச சார்பற்ற அமைப்புடனும், போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துடனும் இணைந்து நடாத்திய அனர்த்த ஒத்திகை நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேசத்தின் பட்டாபுரம் கிராமத்தில் இடம்பெற்றது.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிதியுதவியின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சமுதாய மட்ட அனர்த்தக் குறைப்பினை உள்வாங்குவதனூடாக சமுகத்தின் அனர்த்த மீள்திறனைக் கட்டியெழுப்புதல் (DIPECHO - 7 ) எனும் திட்டத்தின் கீழ் இந்த அனர்த்த ஒத்திகை நிகழ்வு இடம்பெற்றது.

பட்டாபுரம் கிரம சேவகர் ஆர்.பிரபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம், அக்ரெட் நிறுவனத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் எம்.சுதர்சன், மற்றும் மாவட்ட நிழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர்,  எச்.எம்.தாயுல் பலாஹ், அரச அதிகாரிகள். இரணுவத்தினர், கண்டிக்கப் இன்ரெநெஸனல், ஒஸ்பாம், சேவ்தசில்றன், ஆகிய அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கதின் போரதீவுப் பற்று பிரிவு  என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அனர்த்தம் ஒன்று ஏற்படும் வேளையில் மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக வெளியேறுதல், தேடுதல்களை எவ்வாறு மேற்கொள்ளுதல், முகாம்களை எவ்வாறு முகாமைத்துவம்; செய்தல், சுகாதர முதலுதவி செயற்பாடுகளை எவ்வாறு முன்நெடுத்தல், மற்றும் நிவாரண சேவைகளை மேற்கொள்வது தொடர்பாக இதன்போது ஒத்திகை பார்க்கப்பட்டன.