தொழிற்பயிற்சியினை முடித்துக்கொண்டோருக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் சான்றிதழ்கள் வழங்கிவைப்பு

(ச.சுரேந்திக்கா)
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தினால் செயற்படுத்தப்பட்ட தொழிற்பயிற்சிகளை முடித்துக்கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் இன்று 31ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலகத்தில் வழங்கிவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மோகன் பிரேம்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.எம். அசீஸ் அவர்கள் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் க.அருந்தவராஜன் அவர்களின் கோரிக்கைக்கமைவாக, கிழக்கு மாகாண முதலமைச்சரின் ரூபா.4 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில், கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகததினால் கையடக்கத் தொலைபேசி திருத்துதல், அழகுக்கலை, சேலை பிளவுஸ் வெட்டுதல் போன்ற தொழில்களுக்கு குறுகியகால பயிற்சிகள் வழங்கப்பட்டது.   
இன்றையதினம் சேலை பிளவுஸ் வெட்டுதல் பயிற்சியினை முடித்துக் கொண்ட யுவதிகளுக்கு இச் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட  முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.எம். அசீஸ் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,



இந்த பயிற்சி குறைந்த வருமானம் பெற்றுக்கொண்டிருக்கும் அல்லது வருமானம் இல்லாமல் இருக்கும் குறிப்பிட்ட தொழிலில் ஆர்வமுடையவர்களுக்காக  ஆரம்பிக்கப்பட்டது, எதிர்காலத்தில் தமது தேவைக்காகவும் வருமானத்தை ஈட்டக்கூடியதாகவும் இதனை பயன்படுத்திக்கொள்ளவேன்டும். 

இப் பயிற்றசியினைப்பெற வாகரை, வெல்லாவௌி,பட்டிப்பளை போன்ற தூர பிரதேசங்களிலிருந்தும் வந்துள்ளீர்கள் ஆகவே நீங்கள் பெற்ற பயிற்சியை பயனுள்ளதாக அமைக்கவேன்டியது இப் பயிற்சியினைப் பெற்ற உங்கள்கையிலேயே உள்ளது.

இத் தொழிலினை நீங்கள் சிறந்த முறையில் தொடர்ச்சியாக செய்வீர்களானால் எதிர்காலத்தில் நல்ல வருமானத்தைப்பெற்று வாழ்கைத்தரத்தை மேலும் உயர்த்திக்கொள்ளலாம்.

என தனது உரையில் தெரிவித்தார்.

இந் நிகழ்வின்போது கிழக்கு மாகாண முதலமைச்சரின் உதவி செயலாளர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.