வாகரை பிரதேசத்தில் வாழ்வின் எழுற்சி (திவிநெகும) வாழ்வாதார திட்டத்திற்கான பயனாளிகளை விழிப்பூட்டும் செயலமர்வு.

(வாழைச்சேனை-சா.ரவிக்குமார்) வாழ்வின் எழுற்சி (திவிநெகும) வாழ்வாதார திட்டத்திற்கான ஆடுவளர்ப்பு, வீட்டுத்தோட்டம், பழமரச்செய்கை, நிலக்கடலை மற்றும் விற்பனை நிலையம் போன்ற 2014 ஆம் ஆண்டு திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளை விழிப்பூட்டும் செயலமர்வு வாகரை மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் 2014.08.19 ஆம் திகதி இடம் பெற்றது.

இதன்போது பிரதேச செயலாளர் அவர்கள் பயனாளிகளாகிய நீங்கள் எல்லா இடங்களிலும் கடனை பெற்று. கடன்சுமைக்கு உள்ளாகாமல் வாழ்வின் எழுற்சி மூலம் கிடைக்கும் நிதியினைக்கொண்டு குறிப்பிட்ட ஜீவனோபாய தொழில்களை மேற்கொண்டு வருமானதிதை பெற்று உங்களது வாழ்க்கையில் ஒருமாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டதோடு. வுhழ்வின் எழுற்சி திட்டம் தொடர்பாக தெளிவான விளக்கமளித்தார்.

இதன்போது வாழ்வின் எழுற்சி திட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.பி.குணரெட்ணம் அவர்கள், வாழ்வின் எழுச்சி திட்டம் தொடர்பாகவும், வாழ்வின் எழுச்சி உத்தியோகஸ்தர்களின் (திவிநெகும) கடமை தொடர்பாகவும், அவர்களுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் விளக்கமளித்தார்.

மற்றும் வாகரை பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.வே.நவிரதன் அவர்கள், வாழ்வின் எழுற்சி திட்டம்தொடர்பாகவும், பயனாளிகள் தெரிவு செய்த திட்டம் (தொழில்) தொடர்பாகவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின்போது, வாகரை கால்நடை வைத்திய அதிகாரி, வாழ்வின் எழுற்சி மகாசங்க முகாமைத்துவ பணிப்பாளர் திரு.கே.பற்குணராசா, பிரதேச வாழ்வின் எழுற்சி தலைமை முகாமையாளர் திரு.என்.விஜிதன், வங்கிமுகாமையாளர்கள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள்;, பொதுசுகாதார பரிசோதகர்கள், வாழ்வின் எழுற்சி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.