மட்டக்களப்பில் நகரில் நீண்டகாலமாக கைவிடப்பட்டீருந்த நிலம் பொழுது போக்கும் இடமாக மாற்றம்

(சிவம்)
மட்டக்களப்பு நகரில் நீண்ட காலமாக மக்களின் பாவனைக்கு இல்லாமல் இருந்த வாவியை அண்டிய யாட் வீதிப் பிரதேசம் நகரை அழகுபடுத்தும் திட்டத்திக் கீழ் பொழுது போக்கும் இடமாக மாற்றுவதற்கான நிர்மாணப் பணிகள் முடிவுறும் நிலைக்கு வந்துள்ளன.

பொருளாதார அபிவிருத்தியமைச்சின் வாழ்வின் எழுச்சித்  திட்டத்தின் கீழ் 4 மில்லியன் ரூபாய் செலவில் அரச அதிபர் பி.எஸ். ஏம். சாள்ஸ்சின் முன்மொழிவினால் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

மூன்று மாதகால இடைவெளிக்குள் இப்பிரதேசத்தில் 3 பொழுது போக்கு கூடாரங்களுடன் பச்சைப் புல் தரையுடன் கூடிய தோட்டம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக திட்டமிடல் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

மாவட்டச் செயலகம் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டைப் பிரதேசம் உல்லாசப் பிரையாணிகளைக் கவரும் புராதன இடமாக உள்ளதனால் கச்சேரிப் பிரதேசத்திற்கு எதிரே செல்லும் யாட் வீதியை அண்டிய வாவிக்கரை பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.