வாழ்க்கையை வெற்றி கொள்வோம் தொனிப்பொருளிலான மூன்று நாள் செயலமர்வு

(சுரேஷ் ) பட்டிப்பளை வேள்ட் விசன் பிராந்திய அபிவிருத்தி திட்ட அமைப்பின் ஏற்பாட்டில் அப்பிரதேசத்திற்குட்பட்ட கட்டிளம்  பருவ யுவதிகளுக்கான 'வாழ்க்கையை வெற்றி கொள்வோம்' எனும் தொனிப் பொருளிலான மூன்று நாள் செயலமர்வு மட்டக்களப்பு சர்வோதய பயிற்சி நிலையத்தில் அமைப்பின் சுகாதார பிரிவிற்குப் பொறுப்பான திட்ட இணைப்பாளர் என்.சபேசன் தலைமையில் இன்று 20 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பமாகி நடைபெறுகின்றது.


 இச்செயலமர்வின்; முனைக்காடு, மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு போன்ற பிரதேசத்திற்குட்பட்ட யுவதிகள் பலர் கலந்து கொண்டு வாழ்க்கையை வெற்றி கொள்வதற்கான பல விடயங்கள் தொடர்பாக கற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் செயலமர்வின் பயிற்றுவிப்பாளர்களாக பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர். ஏ.எல்.எப்.ரகுமான் மற்றும் பாலியல் தொற்று நோய் தடுப்புப்பிரிவின் பொது சுகாதார பரிசோதகர் பீ.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்க்கை திறண்கள், பாலியல் கல்விகள் மற்றும் பாலியல் நோய்கள் இளவயது திருமணம், நடத்தை மாற்றத்திற்கான தொடர்பாடல்கள் போன்ற விடயங்கள் சம்மந்தமாக பயிற்றுவிக்கப்பட்டது.