திவிநெகும 'சகன அருண' வாழ்வின் எழுச்சி கடன் திட்டம் பெரியகல்லாற்றில் 260 பயனாளிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்வு.

( ரவிப்ரியா )
வறுமையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்குடன் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, சகன அருண கடன் திட்டத்தை தேசிய ரீதியில், அமுல் செய்யும்
நிகழ்வில் கல்லாறு திவிநெகும வங்கியும் 1ந் திகதியன்று திங்கட்கிழமை இணைந்து கொண்டு, கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு, துறைநீலாவணை கிராமங்களைச் சேர்ந்த  260 பயனாளிகளுக்கு ரூபா 5000லிருந்து 50000ரூபா வரை வாழ்வாதர  கடன் வழங்கும் நிகழ்வை பெரியகல்லாறு கலாசார மண்டபத்தில்  நடாத்தியது.


      இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்வை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்துவைத்தார். இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், மாவட்ட திவிநெகும பணிப்பாளர் குணரெட்ணம், முகாமைத்துவ பணிப்பாளர் வி.வரதராஜன், திவிநெகும வங்கி முகாமையாளர் பி.தவேந்திரன், திட்டப் பணிப்பாளர் திருமதி அ.பாக்கியராஜா, கிராம உத்தியோகத்தர், மற்றும் திவிநெகும உத்தியோகத்தர்கள் ஆகியோர் வழங்கி வைத்தனர். பிரதம அதிதி பின்வருமாறு உரையாற்றினார்,

     எமது இனத்தின் கல்வி மேம்பாட்டை கடடியெழுப்புதற்காக நாம் இரவு பகலாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். கல்வியில் ஒப்பீட்டு ரீதியில் ஏற்பட்டுவரும் சரிவை நிமிர்த்தி எடுப்பதற்கே நாம் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.

      எமது முயற்சியால் 40ம் கிராமத்திலிருந்து ஒரு மாணவன் புலமைப் பரிசில் பரிட்சையில் முதற் தடவையாகச் சித்தியடைந்துள்ளான். இதையே நாம் எமது வெற்றியாகக் கருதுகின்றோம். இங்கு ஒரு பாடசாலையை அமைத்துக் கொடுத்து இந்த வரலாற்றுப் பதிவை மேற்கொண்டுள்ளோம். இந்தப் பெறுபேறு வருடாவருடம் அதிகரித்துச் செல்லும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே எமது கடந்தகால துன்ப துயரங்கள் என்ன என்பது எமக்கு நன்கு தெரியும். அதன் தாக்கங்கள் என்ன என்பதும் எமக்கு புரியும். சுமார் இருபதாயிரம் விதவைகளின் சுமைகள் என்ன என்பதும் நாம் அறிந்ததே. எனவே நாம் பொருளாதாரத்திலும் துரித வளர்ச்சியை அடைய வேண்டும். கல்வியும் பொருளாதாரமும் ஏக காலத்தில் கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் எமக்கிருக்கின்றது.

   எமது பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகைகளில் அறிக்கை விடுவதே அவர்களின் தொழிலாக இருக்கின்றது. அவர்கள் எமது சமூக்தின் கல்வி பொருளாதாரம் என்பவற்றைப் பற்றி; அக்கறை கொள்வதில்லை.  மாறாக நாங்கள் அறிக்கைகள் விடாமல் அபிவிருத்தி செய்து கொண்டிருக்கின்றோம். மட்டக்களப்பிற்கு விசேடமான நிதி ஒதுக்கீடுகளை ஜனாதிபதியிடமிருந்து பெற்று  மின்சாரம், குடிநீர்விநியோகம், வீடமைப்பு ஆகிய மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதில் நாம் முன்னின்று செயற்படுகின்றோம்.

   எமது மாவட்டத்தில் சுமார் 20000 ஆயிரம் விதவைகள உருவாவதற்கு முக்கிய காரணகர்த்தாவான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு வாக்களியுங்கள் என்றால் கண்ணை மூடிக் கொண்டு வாக்களிக்கின்றோம். ஜனாதிபதி தேர்தலில் வெல்லக் மூடிய ஒருவருக்கே வாக்களிக்க வேண்டும். ஆனல் எவ்வித சிந்தனையுமின்றி தோற்கக்கூடியவர்களுக்கே வாக்களிக்கின்றோம்.

  ஆனால் எப்போதும் வெல்லக் கூடிய ஜனரிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பத்திசாலித் தனமாக வாக்களிப்பதன் மூலம் நாம் எமக்கான ஒதுக்கீடுகளை வாதாடி அதிகரித்துக் கொள்ளக் கூடிய ஏதுநிலை உருவாகும். எனவே சுயமாகச்       சிந்திப்பதன் மூலமே நாம் எமது இலக்குகளை அடைந்து கொள்ளமுடியும். அதேபோல் எமது அபிலாஷைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
        அமைச்ர்களான ஹிஸ்புள்ளா காத்தான்குடியையும், சேகுதாவுத் ஏறாவூரையும், மாகாண சபை உறுப்பினர்கள் ஓட்டமாவடியையும் அபிருத்தி செய்து கொண்டிருக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தொகுதிகள் இருக்கின்ற போதும் மாவட்டம் முழுக்க நான் ஒருவன் மட்டுமே அமைச்சராக இருந்து அபிவிருத்தி செய்து கொண்டிருக்கின்றேன். எமது மூன்று தொகுதிக்கும் மூன்று அமைச்சர்கள் இருந்தால் நாம் அபிவிருத்தியில் உச்சத்தை அடையலாம் என்ற யதார்த்தத்தை எமது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.