ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடைய எம்எல்ஏ., பதவியையும் பறிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் .தொடர்ந்து ஜெயலலிதா, பரப்பன அக்ரகாரம் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா விரும்பினால் தமிழக சிறைக்கு மாறிக் கொள்ளலாம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் தலா 25 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.இதற்கிடையில் கோர்ட் அறையிலிருந்து ஜெயலலிதா வெளியே வந்து அமைச்சர் பன்னீர் செல்வத்தை சந்தித்து சென்றார்.112 பக்க தீர்ப்பை நீதிபதி குன்கா படித்தார். தண்டனை முழு விவரம் அறிவிக்கப்படும் முன்பே, ஜெயலலிதாவை கோர்ட் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால், ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார்.