வந்தாறுமூலை-வயற்கரை விநாயகர் ஆலய உற்சவம் சிவகங்கை தீர்த்தத்துடன் நிறைவு (வீடியோ)

(சித்தாண்டி நித்தி) வந்தாறுமூலை-உப்போடை வயற்கரை விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த (27) புதன்கிழமை ஆரம்பமாகி இன்று (31) ஞாயிற்றுக்கிழமை சிவகங்கைத் தீர்த்தத்துடன் நிறைவடைந்தது. 

நடைபெற்ற வருடாந்த உற்சவ கால விழாக்களை 1ம் நாள் விழாவை ஆலய பரிபாலனசபையினரும், 2ம் நாள் விழாவை நா.தில்லைநாதன் குடும்பத்தினரும், 3ம் நாள் விழாவை த.சிறிதரன் குடும்பத்தினரும், 4ம் நாள் விழாவை க.தங்கத்துரை குடும்பத்தினரும், இரவு விழாவை வந்தாறுமூலை பொதுமக்களாலும் நடாத்தப்பட்டது. ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு வந்தாறுமூலை மகா விஸ்ணு ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி, மற்றும் உற்சவ நிறைவு நாளன்று அன்னதான நிகழ்வுகளும் சிறப்பான முறையில் நடைபெற்றன. நடைபெற்ற அன்னதான நிகழ்வை க.இராஜேந்திரன், ஆனந்தி, க.கணேசன் குடும்பத்தினரால் வழங்கப்பட்டன.

இறுதி நாளாகிய இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் வயற்கரை விநாயகர் ஆலயத்திலிருந்து எழுந்தருளி வயல் மற்றும் வலய்சூழ்ந்த இடங்களைக் கடந்து எளில்மிக்க அழகிய சிவகங்கையில் விசேடபூசை ஆராதனையுடன் தீர்த்தம் நடைபெற்றன. விநாயகப்பெருமானின் தீர்த்தத்தில் கலந்துகொண்ட அனைவரும் சிவகங்கையில் தீர்த்தம் ஆடுவதை காணலாம். 

ஆலயத்தின் வருடாந்த உற்சவ கால பிரதம குரு பண்டரிநாத் ஐயா தலைமையில் ஆலயத்தின் அனைத்து பூசைகளும் இடம்பெற்றது.