தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் சரஸ்வதி பூஜை


(சிவம்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை இன்று  (30) இடம்பெற்றது.

நவராத்திரி விழாவின் 7 ஆம் நாள் கலை மகளான சரஸ்வதி  பூஜைக்கு  கோலமிடுதல், சரஸ்வதி பாமாலை பாடுதல் மற்றும் பூஜை என்பன இடம்பெற்றன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம். எல். எம். என். நைறூஸ் உட்பட மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.