சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கு

(தியாஷினி)

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் கீழ் செயற்படும் சிறுவர் நன்னடத்தைகள் திணைக்களத்தின் அனுசரணையோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் சிறுவர்கள், பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்று நேற்று (01) மாலை நடைபெற்றது.

சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி.யசோதா கபிலன் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கிற்கு வளவாளர்களாக பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் மற்றும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் வி.திவ்வியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டதுடன், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவின் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.எல்.சிபாயா றமீஸ், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் மற்றும் உளவள ஆலோசகர் ஏ.எம்.சப்றினா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கருத்தரங்கிற்கு ஆலையடிவேம்பு பிரதேச சிறுவர், மகளிர் இல்லங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள், மகளிர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுடன் பெற்றோர்களும் வருகை தந்திருந்தனர். இங்கு சிறுவர்கள், பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் தொடர்பான தெளிவுபடுத்தல்களுடன் அவை தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.