முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலயத்திற்கு மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் விஜயம்

(படுவான் பாலகன்) இவ்வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் அதிகூடிய மாணவர்களை(10) மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மட்.முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலயத்திற்கு இன்று(30) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.க.சத்தியநாதன் விஜயம் செய்து சித்தியடைந்த மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும், அதிபரையும் பாராட்டி கௌரவித்தார்.

இங்கு உரையாற்றிய வலயக்கல்விப் பணிப்பாளர் இப்பாடசாலையானது 2010ல் ஊட்டற் பாடசாலையாக தரம் 01லிருந்து ஆரம்பிக்கப்பட்டு முதற்தடவையாக இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி வலயத்திற்கு சிறந்த பெறுபேற்றை பெற்று தந்துள்ளது
எமது மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்தில் சென்ற வருடம்(2013) 32மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றிருந்தனர். இவ்வருடம் 57மாணவர்கள் சித்தியடைந்து 70வீத சித்தியதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதை போன்று ஒவ்வொரு வருடமும் இவ்வாறாக சித்திவீதம் அதிகரித்துச் செல்ல வேண்டும் அதுபோல மட்.முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் 5மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதுடன் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் 100புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர் இது எமது வலயத்திற்கு கிடைத்திருக்கின்ற பெரும் சாதனை இதைப்போல பல சாதனைகளையும் எமது வலயம் படைக்க வேண்டும் என்றும்,

இதற்காக கூட்டாகச் சேர்ந்து செயற்பட்ட அதிபர், கற்பித்த ஆசிரியர்கள், கோட்டக்கல்விப்பணிப்பாளர், ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்,
அத்துடன் வலயமட்டத்தில் தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சை விசேட செயற்றிட்டத்திற்கு அனுசரணையாளர்களாக இருந்து வெற்றிக்கு வழி வகை செய்து செய்த பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்ட வேள்ட்விஸன் நிறுவனத்திற்கும், சுவிட்சலாந்து முனைப்பு அமைப்பினருக்கும், அவர்களுடன் இணைப்பாளர்களாக செயற்பட்ட பிரதிக்கல்விப் பணிப்பாளர்(கல்வி அபிவிருத்தி) திரு.எஸ்.மகேந்திரகுமார் அவர்களும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் மட்.முதலைக்குடா மகா வித்தியாலய அதிபர் திரு.சி.அகிலேஸ்வரன், விசேடகல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.கமலநாதன், பாடசாலை சமூகத்தினர், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.