கல்குடா-கோறளைப்பற்று வடக்கு கல்விவலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு வலயப்பணிப்பாளர் பாராட்டு

(சித்தாண்டி நித்தி) இவ்வாண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் கல்குடா-கோறளைப்பற்று வடக்கு கல்விகோட்டத்திலுள்ள கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களை கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா நேரில் சென்று பாராட்டுக்களை தெரிவித்தார். இதன்போது பாடசாலையின் அதிபர் உட்பட ஆசிரியர்களும் கலந்துகொண்டிருந்தனர். 

நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் இம்முறை மட்/ககு/கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இருந்து இரண்டு மாணவர்கள் சித்தியடைந்து தமது பாடசாலைக்கு பெருமைசேர்த்துள்ளனர். இப்பாடசாலையில் இருந்து கோ.தனுஜன் 178 புள்ளிகளையும் (மாவட்ட நிலை 72), மாணவி சு.சுகிர்தா 165 புள்ளிகளையும் (மாவட்ட நிலை 460) குறிப்படத்தக்கது. இப்பாடசாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் மாணவி க.அபிசனா 157 புள்ளிகள், சௌ.ஜெனேஸ்கா 152 புள்ளிகள், வி.விதுர்சன் 152 புள்ளிகள், பெற்றுள்ளனர். ஏணைய மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் 16  மாணவர்களும், 70 புள்ளிகளுக்கு மேல் 36 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

வம்மிவட்டவான் வித்தியாலயத்திலிருந்து மிதுர்னா மகேஸ்வரம் 169 புள்ளிகளை பெற்று சித்தியடைந்து தமது பாடசாலைக்கு பெருமைசேர்த்துள்ளார். மேலும் 100க்கு மேற்பட்ட புள்ளிகளை 8 மாணவர்கள் இப்பாடசாலையில் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கல்விக் கோட்டத்தில் மொத்தமாக மூன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 

இதன்போது மட்டக்களப்பு NDB முகாமையாளர் திரு.கனகரெத்திணம் ராஜேந்திரா அவர்களால் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும், அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும், வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்குமான கற்பித்தல் உபகரணங்களை வழங்கினார். குறித்த முகாமையாளர் தனதும், தனது நண்பர்களின் நிதி உதவிகளையும் கொண்டு வறிய மாணவர்களுக்காக தொடர்ந்தும் பல உதவிகளை இப்பாடசாலைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.