சிறு நீர்பாசன குளங்கள் புனரமைப்பு வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு


பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு சிறு நீர்பாசன குளங்களை புனரமைப்பு வேலைத்திட்டத்திற்காக ரூபா.5மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது.

இந் நிதியில் முதலாம் கட்டமாக வில்வேரி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மரையறிஞ்ஞான் குளத்தினை புனரமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 01.09.2014ந் திகதி பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் திருமதி.சசிதேவி ஜலதீபன் அவர்களின் தலைமையின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே அவர்கள் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டு இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். மேலும் அரசியல் தலைவர்கள்,பொதுமக்கள்,அரச உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். மேற்படி வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள மரையறிஞ்ஞான் குளத்திற்காக ரூபா.3.4மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது