வாகரையில் கூத்து விழா

கிழக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையில் வாகரைப் பிரதேச செயலகம் நடத்தும் பாரம்பிய கூத்து விழா 19 ஆந் திகதி வெள்ளிக்கிழமை மாலை 07.00 மணி தொடக்கம் வாகரை புளியங்கண்டலடியிலுள்ள மாரியம்மன் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.

இதில் சின்னத்தட்டுமுனை விநாயகர் கலைக்குழுவினர் வழங்கும் 'குசலவன் நாடகம்' வடமோடிக் கூத்தும், புளியங்கண்டலடி கீதம் கலை மன்றத்தினர் வழங்கும் 'அயோத்தி மன்னன்' வடமோடிக் கூத்தும், புலிக்கூத்து ஆற்றுகையும், நாட்டார் பாடல் அளிக்கைகளும் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்ச்சிகள் பிரதேச செயலாளர் திருமதி எஸ்.ஆர்.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளதுடன் இதற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டு திணைக்கள பணிப்பாளர் டபிள்யு.ஏ.எல்.விக்கிரம ஆராச்சி அவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கலாசார உத்தியோகத்தர் பி.சிவராம் தெரிவித்தார்.