இளுப்படிச்சேனை கிராமத்திற்காக பொது நோக்கு மண்டபம் திறந்து வைப்பு


ஜரோப்பிய ஒன்றியம், அவூஸ்ரேலிய அட் மற்றும் சுவிஸ் நாட்டின் அபிவிருத்திக்கான கூட்டமைப்பு (எஸ்.டி.சி) ஆகிய அமைப்புக்களின் நிதியுதவியின் யூஎன்-ஹபிடாட் நிறுவனத்தின் செயற்திட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட  இளுப்படிச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு அப்பிரதேச மக்களது வசதி கருதி கிராம பொது நோக்கு மண்டபம் அமைத்துக் கொடுக்கப்பட்டு அதன் உத்தியோக பூர்வமான திறந்து வைக்கும் நிகழ்வு இளுப்படிச்சேனை கிராமிய அபிவிருத்திச் சங்கத்தின் உருப்பினர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக யூஎன்-ஹபிடாட் நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தின் திட்ட முகாமையாளரும் ஆலோசகருமான கேய்கோ மட்சூவே திட்ட வடிவமைப்பாளர் எம்மா கனுலா மற்றும் உதவி உத்தியோகத்தர்களான சந்திரா கோமேஸ், எஸ். தனுஜா அத்துடன் அமைப்பின் பொருளியலாளர் எம்.ரஜீவ் ஆகியோர் உட்பட்ட கிராம மக்களுமாக பலர் கலந்து கொண்டனர்.

அந்தவகையில் இக்கட்டிடமானது ஜரோப்பிய ஒன்றியம், அவூஸ்ரேலிய அட் மற்றும் சுவிஸ் நாட்டின் அபிவிருத்திக்கான கூட்டமைப்பின் (எஸ்.டி.சி) அமைப்புக்களின் நிதியுதவியின் 2,520,00 ரூபா பெறுமதியில் சகல வசதிகளும் கொண்ட பொது மக்களது பாவனைக்காக நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது அத்துடன் இந்நிகழ்வின் பின்னர் மரநடுகையும் இடம்பெற்றது.