கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் தேரோட்டம் - வீடியோ

(படுவான் பாலகன், சதீஷ் , வரதன் & தில்லை )

இலங்கைத்திரு நாட்டின் ஐந்து ஈச்சரங்கள் உண்டு அந்த ஈச்சரங்களில் ஒன்றுதான் கிழக்கிலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சர ஆலயமாகும்.

அந்நியர் ஆட்சியின் போது பல ஆலயங்கள் இருந்த இடமே இல்லாமல் அழித்தொழிக்கப்பட்டன இந்த வேளையிலே இந்த ஆலயத்திiயும் அழிப்பதற்கான முனைப்போடு வந்த வெள்ளையர்களை விரட்டி அடித்த ஒரு புகழ்பெற்ற ஈச்சரமாக இவ்வீச்சரம் விளங்குகின்றது.

கிழக்கில் தேரோடும் சிறப்பு மிக்க வரலாற்றுத்தலமாகிய கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சர பெருவிழா கடந்த மாதம் 28அம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று தேரோட்டம் நடைபெற்று நாளை தீர்த்த உட்சவத்துடன் மகோற்சவ திருவிழா இனிதே நிறைவு பெற இருக்கின்றது.

இன்று நடைபெற்ற தேரோட்ட நிகழ்விலே இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் வெள்ளம் போல் திரண்டு தேரோட்ட நிகழ்வில் கழந்து கொண்டு சிவனின் நல்லாசியினை பெற்றுக்கொண்டார்கள்.
இவ்வாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தேரினை இழுப்பதற்கான வடத்தினை கன்னங்குடா மக்கள் கொண்டு வந்து ஆலயத்தில் ஒப்படைப்பதும் குறிப்பிடத்தக்கது.