சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலய தீர்த்தோற்சவம் - வீடியோ

(நித்தி) மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருக  ஆலயங்களுள் ஒன்றான  சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றமானது கடந்த (25.08.2014) திங்கட்கிழமை   மகோற்சவ பிரதம சிவச்சாரியார் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருஜீ ஆன்மீக அருள் ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. 

இறுதி நாளாகிய இன்று 09.09.2014 (செவ்வாய்க்கிழமை) சித்தாண்டி  சித்திரவேலாயுத சுவாமியின் பிரணவ தீர்த்தம் காலை  8.20 மணியளவில் சித்தாண்டி உதயமூலையில் உள்ள சரவணப்பொய்கையில் நடைபெற்றது 

நடைபெறவிருக்கும் தீர்த்த உற்சவத்திற்கு நாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தீர்த்தமாடுவது வழமை அந்தவகையில் கடந்த வருடங்களைவிட இவ் வருடம் பல மடங்கு ஆடியார்கள் வருகைதந்து சித்தாண்டி முருகப்பெருமானின்   பிரணவ தீர்த்தத்தில் கலந்துகொண்டு தீர்த்தமாடினார்கள். 

தீர்த்தக்கரைக்கு வரும் பக்தர்களின் நலன்கருதி ஆலய நிருவாகத்தினரால் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதுடன், பக்தர்களுக்கென தாக சாந்தி நிலையத்தை  கால் நடை வளர்ப்போர் சங்கமான மயிலத்தமடு, பெரிய மாதவணை, பால் உற்பத்தியாளர் சுயபரிபாலன சபை சித்தாண்டி, நெஸ்லே பால்சபை, செங்கலடி வர்தத்க சங்கம், சித்தாண்டி பொதுமக்கள் இதனை சித்தாண்டி இளஞ்சைவ மாணவ மன்றம் ஒழுங்கமைப்புகளை மேற்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் சித்தாண்டி அன்னதான சபையினரால் அன்னதானமும் வழங்கப்பட்டது.