பண்டாரியாவெளி கிராமத்திலிருந்து இ.போ.வரத்துக்கு சபைக்கு சொந்தமான பஸ் சேவை இன்று முதல் ஆரம்பம்


(அரசையூர் சிறிகரன், வரதன் ) 
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுட்குட்பட்ட பண்டாரியாவெளி கிராமத்திலிருந்து இலங்கை போக்கு வரத்துக்கு சொந்தமான பஸ் சேவையானது இன்று 18.09.2011 வியாழக்கிழமை 2 மணியளவில் ஜக்கிய மக்கள் சுகந்திரக் கட்சியின் உபதலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் கெளரவ விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் கால்நடையாக அரசடித்தீவு கிராமத்தில் கற்றல், கற்பித்தல், மட்டுமல்லாது மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் வேறு பல தேவைகளின் நிமிர்த்தம் காரணமாகவும் கடந்த 14 ஞாயிறு பண்டாரியாவெளியில் நடைபெற்ற கிராமத்திற்கான வேலைத்திட்ட நிகழ்வின் போது அக்கிராம மக்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரின் சங்கத்தினர் பிரதியமைச்சரின் விசேட கவனத்திற்கு கொண்டுவரப்பட்டமையால் அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததன் காரணமாக இக்கிராமத்திற்கு இச் சேவை வழங்கப்பட்டது.


இப் பேரூந்து சேவையானது   அரசடித்தீவு பாடசாலை வீதியினூடாக சென்று பண்டாரியாவெளி கிராம உள் வீதி வழியாக  படையாண்டவெளி சந்திவரை சென்று பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலய பிரதான வழியாக திரும்பி அரசடித்தீவு பாடசாலை வீதியினூடாகசென்று பட்டிப்பளை கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு பிரதான வீதியினூடாக சென்று மட்டக்களப்பு பேரூந்து தரிப்பிடத்தை சென்றடையும்.

  நிகழ்வின் போது மீள் குடியேற்ற பிரதியமைச்சரின் ணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன்,  பிரத்தியோகச் பிரத்தியேக செயலாளர் பேரின்பமலர் மனோகரதாஸ்  இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலை முகாமையாளர் மனோகரன், முன்னாள் பட்டிப்பளை பிரதேச தவிசாளர் த.பேரின்பராசா மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.