167ம் ஆண்டு நிறைவில் அமிர்தகழி மெதடிஸ்த ஆலயம்

2014.10. 24,25,26 ம் திகதியில் அமிர்தகழி மெதடிஸ்த ஆலயத்தின்  167வது ஆண்டு விழாவானது இயேவின்  இரண்டாம்  வருகை எனும் தொணிப் பொருளில்  இடம்பெற உள்ளது. வெள்ளி மாலை 4.30  மணிக்கு  ஆரம்பமாகும் நிகழ்வானது சனிக்கிழமை முழு நாள் நிகழ்வாகவும் ஞாயிறு வழிபாட்டுடன் நிறைவுக்கு வருகின்றது.

1847ம்  ஆண்டு  முகத்துவாரம்  இறங்குதுறையுடாக அமிர்தகழி  வந்தடைந்த  Ralfstod எனும் மிஷனரி மூலம் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயமானது 167 ஆண்டு வரலாற்றினைக்  கொண்டதாகும.;. இவ்ஆலயத்தில்  Ralfstod மிஷனரி வாயிலாக  முதன் முதலாக 50 விசுவாசிகள் திருமுழுக்கு  பெற்றதாகச் சான்று பகிர்கின்றது.
இவ்வாலயத்தின் அருகில் 1871 ம் ஆண்டு கட்டப்பட்ட மெதடிஸ்த மிஷன் கலவன் பாடசாலையில்  பயின்ற மாணவர்கள் மேலாடையின்றி காணப்பட்டதாகவும் மிசனரியின் குறிப்பேட்டில்  காணப்படுகின்து. இப் பாடசாலையானது இன்று அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் எனும் பெயரோடு இயங்குகிறது எனலாம்.

ஆரம்ப காலத்தில் கட்டப்பட்ட இவ்வாலயத்தின் ஓடுகளில்  “Made in England”  எனவும் ஆலயத்தின் அஸ்திபாரம் செங்கற்களாலும் சுவர் முக்கோண வடிவில் உள்ள செங்கல்லாலும் உருவாக்கப்பட்டு காணப்பட்டது ஆலயத்தில் உள்ள மணித்தூணின் மணியானது ஓர் கப்பலின் மணியாக உள்ளது விசேட அம்சம் ஆகும். இம் மணித்தூண் ஆனது  நாகமணி சாம்சன் இராசையாவால்   கட்டப்பட்டு  பழமையின் சின்னமாக காட்சி தருகின்றது.

1978ம் ஆண்டு வீசிய சூறாவளி காரணமாக ஆலயம் சேதமடைந்தது. 1979 ம்  ஆண்டு அருட்திரு. K.Sவேதநாயகம் ( சேகர முகாமைக்குரு ) அவர்களின் காலத்தில் புனர்நிர்மானம் செய்யப்பட்டது. 

இவ்வாறு புனர்நிர்மானம் செய்யப்பட்ட ஆலயம் 2004 ம் ஆண்டு  சுனாமியினால் பாதிக்கப்பட்டது,. இதன் பின்னராக  ஜேர்மன் நாட்டு மக்களின் உதவியுடனும் திருச்சபை மக்களின் பங்களிப்புடனும் புதிய ஆலயமும் குருமனையும் Ralfstod மண்டபமும்  கட்டப்பட்டு சேகர முகாமைக்குரு அருள்திரு S.S. ஞானராஜா ( வடகிழக்கு சபாசங்கத்தலைவர்), சபை போதகர் அருள்செல்வி . ஜெபராணி பேதிரு காலத்தில் 2008 ஆண்டு திருப்பேரவைத் தலைவர்   அருள்திரு . W.P எபிநேசர் ஜோசப் அவர்களால் பிரதிஷ;டை  செய்யப்பட்டு குருமனை, மண்டபம் என்பன திறந்து வைக்கப்பட்டது .
  இச் சபையில்  இருந்து முழு நேர அருள்பணிக்காக தன்னை ஒப்புக் கொடுத்த  அருள் திரு.சுஜிதர் சிவநாயகம், குருத்துவ தேர்வு நாடியாக திரு. போல் வசிகரன் யோகராசா ஆகியோர் முன்வந்ததை சபையின் ஆன்மீக வளர்சியினை காட்டுகிறது. 
 
தற்போது கோட்டைமுனை சேகரத்திற்குட்பட்ட பழமை வாய்ந்த அமிர்தகழி சபையானது 64 குடும்பங்களோடு சபை; போதகர் அருள்திரு S. பஞ்சரெட்ணம் தலமையில் சேகர முகைமைக்குரு அருள்திரு.சாமுவேல் சுபேந்திரன் ,சேகர துணைக்குரு அருள்திரு.வேதநாயகம் சிறிபால்ராஜ் ஆகியோரின் வழிகாட்டலில் தன் ஆன்மீக பயணத்தை தொடர்கிறது.