வவுணதீவு சாலம்பக் கேணிபிரதேசத்தில் 23,9000 ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டவளநிலையதிறந்து வைப்பு

(சுரேஸ்)
மட்டக்களப்பு எஸ்கோநிறுவனம் ஏற்பாடுசெய்திருந்தசர்வதேசசிறுவர் தினம் மற்றும் வளநிலையம் திறந்துவைக்கும் நிகழ்வு மண்முனை மேற்குபிரதேசசெயலகபிரிவிற்குட்பட்ட சாலம்பக்கேணிகிராமத்தில் எஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.ஸ்பிரிதியோன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மண்முனைமேற்குபிரதேசசெயலாளர் எஸ்.சுதாகர் மற்றும் வளநிலையத்திற்கான நிதிவழங்கும் அமைப்பான வோர் சைல்ட் கொல்லண்ட அமைப்பின் இலங்கைகான பணிப்பாளர் மரீனாடொரீஸ் லீனஸ் அத்துடன் எஸ்கோநிறுவனத்தின் திட்ட இணைப்பாளர்கள் பிரதேசகிராமசேவகர்கள்,சிறுவர் பாதுகாப்புஉத்தியோகத்தர் மற்றும் பொதுமக்களுமாகபலரும் கலந்துகொண்டனர்.

இவ்வளநிலையமானதுஐரோப்பியஒன்றியம் வோர் சைல்ட் கொல்லண்டஅமைப்புக்களின் நிதியுதவியில் சாலம்பக்கேணிபிரதேசசிறுவர் இளைஞர்களது பாவனைக்காக 239000 ரூபாசெலவில் நிர்மாணிக்கப்பட்டு பிரதேசசெயலாளரினால் உத்திNயோகபூர்வமாகதிறந்துவைக்கப்பட்டதுடன் சிறுவர் கழகங்களுக்கான நூல்கள் தாளவாத்தியகருவிகளும் வழங்கிவைக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.