வண பிதா வெபர் கிண்ணத்தைப் பெறுவதற்கான பலப்பரீட்சை - பாடுமீன் எதிர் கோல்ட்பிஸ் - சனி பி.ப 3.30 மட்.இந்துக்கல்லூரி மைதானம்

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் இடைக்கால நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மைக்கல் மென் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்டு வரும் வண. பிதா வெபர் ஞாபகார்த்தக் கிண்ணத்துக்கான ஏ பிரிவு கழகங்களுக்கிடையிலான நொக்கவுட் முறையிலான கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நாளை சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விறுதிப் போட்டியில் பாடுமீன் கழக அணியை எதிர்த்து கோல்ட் பிஸ் கழக அணி மோதவுள்ளது