குரு பிரதீபா பிரபா விருது பெற்ற மண்டூர் 39 அ.த.க. பாடசாலை அதிபர் துரை.சபேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

(பழுவூரான்)
வருடாந்தம் நடைபெறும் ஜனாதிபதி விருதான ‘குரு பிரதீபா பிரபா’ விருது  வழங்கும் நிகழ்வில் இவ்விருதினைப் பெற்ற பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையான மட்/பட்/மண்டூர் 39 அ.த.கபாடசாலை அதிபர் திரு,துரைராசா சபேசன் அவர்களை பாடசாலைச் சமூகம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.
அம்பிளாந்துறையை பிறப்பிடமாகக்
கொண்ட இவர் மட்/அம்பிளாந்துறை கலைமகள்  மகா வித்தியாலயம். மட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயம் அகிய பாடசாலைகளில் கல்வி பயின்று வவுனியா தேசிய கல்வியியற் கல்லுரியில் ஆசிரியர் பயிற்சி பெற்று மட்/துறைநீலாவணை விபுலானந்தா வித்தியாலயத்தில் 1997.07.28ம் திகதி தனது முதல் நியமனத்தைப் பொறுப்பேற்றுக்கொண்டு  மிகத் திறமையாக செயற்பட்டு முதன்முதலாக அப்பாடசாலையில் தரம் 05 புலமைப்பரிசில்  பரீட்சையில் சித்தியடைச் செய்து பெருமையைப் பெற்றவர் அதனைத் தொடர்ந்து அப்பாடசாலையில் தொடர்ச்சியாகப் பல மாணவர்களைச் சித்தியடைச் செய்ததுடன் மாவட்ட மட்டம். தேசிய மட்ட நிலையில் திறமைச் சித்தி பெறச் செய்த பெருமையும் இவருக்கு உண்டு. இவரது சேவை அப்பிரதேசத்திற்கு மட்டுமல்ல பட்டிருப்பு கல்வி வலயத்திற்கே பெருமையை தேடிக்கொடுத்ததனால்  வலயக் கல்விப்பணிப்பாளர்களினதும். கல்வி அதிகாரிகளாலும் பாராட்டுப்பெற்றவர். தொடர்ந்து மட்/உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியர் பணியைத் தொடர்ந்ததுடன் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக உளவளத்துணை சிறப்பு பயிற்சி பெற்று வலயத்தின் இணைப்பாளராக செயற்பட்டு பல மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்கு உதவியவர். 03.02.2010 இல் இருந்து மட்/பட்/மண்டூர் 39 அ.த.க. பாடசாலை அதிபராக செயற்பட்டு வரும் இவர் அப்பாடசாலை மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்கு பெரும்பாடுபட்டு வருகின்றார். பட்டிருப்பு கல்வி வலயத்தில் போரதீவு கல்விக் கோட்டத்தில் மிகவும் பின்தங்கிய எல்லைப்புறப் பாடசாலையாகும். எது எவ்வாறாக இருந்தாலும் இவருடன் இணைந்த ஆசிரியர் குழாத்தினால் பல சிரமங்களுக்கு மத்தியில் சிறப்பான அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதனால் அப்பாடசாலை வலயத்தில் உயிரோட்டமுள்ள பேசப்படும் பாடசாலையாக மாற்றியமைத்துள்ளார்கள். தற்போது அப்பாடசாலையில் மாணவர்களின் சேர்வு வீதம் அதிகரித்து மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  மாணவர்களின் கற்றல் முன்னேற்றம் அதிகரித்து தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் அனைத்து மாணவர்களும் சித்தி பெற்றுள்ளதுடன் பாடசாலை கவின் நிலைப்படுத்தப்பட்டுளுளமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் மாணவர்களின் சிறந்த கல்வி நோக்கத்தினை கருத்தில் கொண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஞானவிளக்கு என்னும் பெயரில் மாதிரிப் பரீட்சை வினாத்தாள்களை தயாரித்து பலவருடங்களாக வெளியிட்டு வருகின்றார். அத்தோடு தரம் 04. 05 மாணவர்களுக்கான பொது உளச்சார்பு புத்தகம் இவ்வெளியீடுகள் அனைத்தையும் இலங்கையில் உள்ள தமிழ் மொழி மூலப்பாடசாலைகள் அனைத்தும் பயன்பெறுவதானால் அகில இலங்கை ரீதியில் புகழ் பெற்ற ஆசிரியராக இருந்து வருகின்றார். இவரது அனைத்து சேவைகளின் வினைத்திறனுக்கு இவ்வருடம் நடைபெற்ற சிறந்த ஆசிரியர்களுக்கான குரு பிரதீபா பிரபா விருது பெற்றுள்ளமை இவரது உன்னதமான சேவைக்கு கிடைத்த உயரிய சான்றிதழாகும்.  


அதிபர். துரை.சபேசன்

பாடசாலை ஆசிரியர்களினால் கௌரவிக்கப்பட்ட போது..........