ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 57 மாணவர்களுக்கு பரிசழிப்பு…




மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இவ்வருடம் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பரிசழிப்பு நிகழ்வு இன்று சனிக்கிழமை (18) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்புக் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பாஸ்கரன், மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து இவ்வருடம் ஐந்தாம் ஆண்டு புலமை பரீசில் பரீட்சையில் சித்தி பெற்ற 57 மணவர்கள் மாணவர்களுக்கும் இதன்போது ஞாபகச் சின்னம், புத்தக பை, கொப்பி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன
.

மட்டக்களப்பு –பண்டாரியாவெளி கிராமத்தை பிறப்பிடமாகவும். தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வருபவருமான அலையப்போடி நல்லரெத்தினம் குடும்பதினர் இந்த பரிசழிப்பு விழாவிற்கு  நிதியுதவியினை வழங்கியுள்ளதோடு, பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களின் நிதி உதவியில் இந்த மாணவர்களுக்கு மழை பாதுகாப்பு அங்கிகளும் வழங்கப்பட்டதாக , மட்டக்களப்பு மாவட்ட  இந்து இளைஞர் பேரவையின் தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் கூறினார்.