கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கான வாக்கெடுப்பு முடிவுகள்

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அடுத்த மூன்று வருடத்திற்கான உபவேந்தர் பதவிக்கான வாக்கெடுப்பு  இன்று (21) செவ்வாக்கிழமை கிழக்கு பல்கலைகழக சபா மண்டபத்தில் நடைபெற்றது. 

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கான உபவேந்தர் நியமனத்திற்காக தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் இன்று ஒன்றுகூடிய பேரவை உறுப்பினர்களின் முன்னிலையில்  இத்தெரிவு இடம்பெற்றது.

நடைபெற்ற உபவேந்தர் தெரிவின்போது அதிகப்படியான 15 விருப்பு வாக்குளைப் பெற்று தற்போது உபவேந்தர் பதவியிலுள்ள கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா முதலாவது இடத்தை பெற்றுள்ளதுடன்,  இரண்டாம் மூன்றாம் இடங்களை கலாநிதி கே.பிரமகுமார் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் 10 வாக்குகளையும், கலாநிதி எம்.எம்.மௌசூன் 10 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

வாக்குகளின் அடிப்படையில் கலாநிதி எஸ்.சுதர்சன் 7 வாக்குகளையும், கலாநிதி ரி.திருச்செல்வம் 7 வாக்குகளையும், கலாநிதி ரி.ஜெயசிங்கம் 7 வாக்குகளையும், இறுதியாக 1 வாக்குகளைப் பெற்று கலாநிதி ஜே.கெனடி ஆகியோர் தங்களது பெறுபேற்று நிலைகளைப்  பெற்றுக்கொண்டனர். 

விண்ணப்பங்கள் கோரப்பட்டு மொத்தமாக தகுதியுடைய 9 போர் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த நிலையில் இறுதிக்கட்டத்தில் இரண்டு விண்ணப்பதாரிகள் விலகியிருந்தனர், அதனடிப்படையில்இன்று நடைபெற்ற உபவேந்தர் தெரிவின்போது மொத்தமான 7 விண்ணப்பதாரிளுக்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

இன்று நடைபெற்ற உபவேந்தர் தெரிவின்போது பேரவையினால் தெரிவுசெய்யப்பட்ட முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களின் பெற்ற வாக்குகளின் அப்படையில் பெயர்கள் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு இறுதியாக நாட்டின் ஜனாதிபதி அவர்களினால் அடுத்த மூன்று ஆண்டு காலங்களுக்குமான பதவிக்கான உபவேந்தர் தெரிவுசெய்யப்பட இருக்கின்றமை குறிப்படத்தக்கது.