வாகரை-பால்சேனை கிராமத்தில் அரும்புகள் முன் பாடசாலை கட்டடம் திறந்துவைப்பு

(சித்தாண்டி நித்தி) பால்சேனை கிராமத்தில் அரும்புகள் முன் பாடசாலை கட்டடம் புணமைக்கப்பட்டு கடந்த 29ஆம் திகதி வாகரை பிரதேச செயலாளர் செல்வி ஆர்.ராகுலநாயகி பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இப்பாடசாலையின் கட்டத்தை திறந்துவைத்தார். 

கடந்த காலத்தில் அரும்புகள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு நிர்வகிப்பட்ட இப் பாடசாலை தற்பொழுது குறிந்த நிறுவனத்தின் திட்டம் நிறைவு பெற்ற நிலையில் பால்சேனை மக்களாலே ஆசிரியர்களுக்குரிய ஊதியம் வழங்கப்பட்டு இப்பாடசாலை இயங்குகிவருகின்றது.

இப்பாடசாலையின் கட்டிடம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதினால் இதனை கருத்தில் கொண்ட வாகரை பிரதேச செயலகம் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு  ஊடாக முயற்சிகளை மேற் கொண்டு புணை நிறுவனத்தின் நிதி அணுசரணையுடனும் கிராம மக்கள் பங்களிப்பூடாகவும பால்சேனை கிராம அபிவிருத்தி சங்கத்தினர் இந்த கட்டிடத்தினை புணரமைப்பு செய்தமை குறிப்படத்தக்கது.

புணரமைக்கப்பட்ட கட்டடத்திறப்பு விழாவுக்கு புணை நிறுன பணியாளர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், முன் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பால்சேனை கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகஸ்த்தர், வாழ்வின் எழுச்சித் திட்ட உத்தியோகஸ்த்தர் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.