நடைபெறயிருக்கும் சனி பெயர்ச்சியும் செய்யவேண்டிய பரிகாரமும்

(சித்தாண்டி நித்தி) சதய நட்சத்திரமும் மிதுன லக்கினத்தில்  கும்பராசியில் மாலை 8 மணி 54 நிமிடமளவில் 02.11.2014 திகதியன்று திருக்கணித பஞ்சாங்கப்படி சனீஸ்வர பகவான் துலாராசி சஞ்சாரத்தை பூர்த்தி செய்து விட்டு விருட்சிக ராசியில் பிரவேசிக்கின்றார்.

சனீஸ்வர பகவானின் ராசி மாற்றத்திற்காக விநாயகப் பெருமானுக்கும், சனீஸ்வர பகவானுக்கு விசேட பூசையும் நவக்கிரக யாகமும் அடியார்கள் 108 முறை வலம் வந்து எள்தீபம் ஏற்றி எள்சாதம் நிவேதனம் செய்து சனீஸ்வர பகவானுக்கு கறுப்பு வஸ்திரம் சாத்தி வன்னி பத்திரம் நீல மலர்களால் 108 நாம அர்ச்சனை செய்து சனீஸ்வர தோத்திரம் சனீஸ்வர காயத்திரி ஜெபம் கோளாறு பதிகம் நவக்கிரக தோத்திர பாராயணமும் செய்தால் நற்பலன் கிடைக்கும்.

சனி பகவான் என்றே பகவானுக்கு நிகராக வைத்து எண்ணத்தக்க அளவில் மிக சக்தி வாய்ந்தவர் ஜோதிட சாஜ்திரத்தைப் பொறுத்தவரை குறிப்பிட்ட சில நேரங்களில் அதாவது ஏழரை நாட்டு சனி அர்த்தமட்டமச்சனி போன்றவை நடைபெறும் காலங்களில் ஒரு ஜாதகருக்கு கெடு பலனை செய்வான் எனச் சொல்லப்படும் சனிபகவான் தீயவன் அல்லன் சனிபகவானை உள்ளன்புடன் வழிபட்டு போற்றினால் எந்தவொரு துன்ப நிலையிலும் நிவாரணம் உண்டாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை அது நம்பிக்கையில் தான் இருக்கும். 

எனவே மிதுனம், கன்னி, மகரம், ராசியினருக்கு யோக பலன்களும் மேடம், இடம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனு ஆகிய ராசியினர்கள் கஸ்டபலன்கள் அனுபவிக்க இருப்பதால் அதற்கான பரிகாரங்களை செய்து கொள்வது நல்லதாகும். 

இவ்வாறெல்லாம் கைகொள்ள முடியாதவர்கள் தாம் உணவு உட்கொள்ளமுன் ஒரு பிடி உணவை காக்கைக்கு இடுவது நல்லது. இவ்வாறாக நம்மால் இயன்ற பரிகாரங்களை மேற்கொண்டு சிரத்தையுடன் சிந்தனையை செலுத்தி உள்ளபூர்வமாக உருகி வழிபட்டால் சனிபகவானின் அருளை பரிபூரணமாக பெற்று வாழ்வில் வளமும் நலமும் பெறலாம் என்பது ஐயமில்லை.

சனி விருட்சிக ராசியில் நிற்கும் பன்னிரு ராசிகளின் பலன் 

வந்தாறுமூலை மருங்கையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில்  02.11.2014 அன்று நடைபெறவுள்ள சனீஸ்வர யாகத்திலும் ஆடியார்கள் கலந்து சிறப்பிக்கலாம்.


இவ்வண்ணம்: ஆலய பிரதம குரு, சிவ ஸ்ரீ கா.ஜெயக்குமார் குருக்கள், மருங்கையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், வந்தாறுமூலை.