மட்டக்களப்பு மாநகரசபையினால் புத்தக கண்காட்சியும் மலிவு விற்பனையும்


(சிவம்)
வாசிப்பை நேசிக்க வைக்கும் கருப்பொருளில் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாசகர சபையின் ஆணையாளர் எம்; உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு மாநகர சபையின் தேசிய வாசிப்பு மாதத்தின் ஒரு நிகழ்வாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை மற்றும் மீரிய பெத்தைத் தோட்டங்ஙகளில் மண்சரிவில் உயர் நீத்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரதம அதிதியாக மாவட்ட அரச அதிபர் பி;.எஸ்.எம். சாள்ஸ், கௌரவ அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடாதிபதி வைத்தியக் கலாநிதி ரி. சுந்தரேசன் ஆகியோர் கண்காட்சியைத் திறந்து வைத்தனர்.

சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா, உதவிக் கலவிப் பணிப்பாளர் (தமிழ்) த. யுவராஜன், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொழும்பு மற்றும் மட்டக்களப்பின் முன்னணி புத்தக நிலையங்கள் பலதுறைப்பட்ட நூல்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.