மட்டுமா நகரில் கோவிலூர் செல்வராஜனின் 'இல்லாமல்போன இன்பங்கள்' நூல் அறிமுக விழா

( ரவிப்ரியா )
மட்டக்களப்பு மாநகரசபையின் அனுசரளையுடன் செங்கதிர் இலக்கிய வட்டம் நடாத்தும் கோவிலூர் செல்வராஜனின், 'இல்லாமல் போன இன்பங்கள்' நூல் அறிமுக விழா எதிர்வரும் 25ந் திகதி சனிக்கிழமை காலை 9.30க்கு செங்கதிர் இலக்கிய வட்ட தலைவி செல்வி க.தங்கேஸ்வரி தலைமையில் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
   பிரதம அதிதிகளாக மாநகர ஆணையாளர் மா.உதயகுமார், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரனும், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் செ.எதிர்மன்னசிங்கம், கொழும்பு தமிழ்சங்க செயலாளர் த.சிவசுப்பிரமணியம் ஆகியோரும் கலந்து கொள்ளுகின்றனர்.

  வரவேற்புரையை தென்றல் ஆசிரியர் க.கிருபாகரனும், அறிமுக உரையை செங்கதிர் ஆசிரியர் செங்கதிரோனும், நூல் நயவுரையை கிழக்கு பல்கலைக் கழகமொழித்துறை தலைவர் திருமதி ரூபினா வெலன்ரீனா பிரான்சிசும் ஆற்றுவர். அத்துடன சிறப்பம்சமாக கோவிலூர் செல்வராஜன் மற்றும் இரா.தெய்வராஜன ஆகியோர் இணைந்து வழங்கும் மட்டக்களப்ப மண்ணின்; பாடல்கள் இசை நிகழ்வும் இடம் பெறும்.

  இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியக தவிசாளர் பொன் செல்வநாயகம், சட்டத்தரணி கி.துரைராஜசிங்கம், அரிமா  கலாநிதி அ.செல்வேந்திரன், மக்கள் வங்கி கிளை முகாமையாளர் சரவணபவான், பாவலர் சாந்திமுகைதீன், புதுவை தலைவர் மா.சதாசிவம் ஜே.பி சென் N;ஜான்ஸ் அம்புயூலன்ஸ் மாவட்ட தலைவர் அல்ஹாஜ் எ.எல்.மீpராசாகிபு ஆகியோர் கலந்து கொள்ளுகின்றனர். இவர்கள் பிரதிகளை சம்பிரதாயபூர்வமாக பெற்றுக் கொள்வர்.