மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மைச் செய்கை ஆரம்பம்!

(சித்தாண்டி நித்தி) மாவட்டத்தில் பல பகுதிகளில் மழையை நம்பி வேளாண்மைச் செய்கையை எதிர் பார்த்து இருந்த பெரும்போக செய்கை விவசாயிகள் கடந்த தினங்களில் பெய்த மழையைத் தொடர்ந்து விவசாய நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். 

கடந்த தினங்களில் பெய்த மழையின் நன்மையினால் மேட்டு நில பயிர்ச் செய்கையளர்களும் சோழன், கச்சான், மரவள்ளி என பல இதர பயிர்களையும் நட ஆரம்பித்துள்ளமையை பிரிதேசங்களில் காணக்கூடியதாகவுள்ளது. 

ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள ஈரளக்குளப்பிரிவு, பெரியவட்டவான், குருகணாமடு, வெள்ளையன்டசேனை மற்றும் குடாவட்டவான் என பல பிரிவுகளில் பெரும்போக விவசாயச் செய்கை ஆரம்பித்துள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது. 

கிரான் பிரதேச செயலகப் பிரிவுகளான குளாவடி, கோராவெளி போன்ற பல இடங்களிலும் இந்த வருடத்திற்கான பெரும்போக விவசாய செய்கைகளில் விவசாயிகள் ஈடுபடுவதைக்காணக் கூடியதாகவுள்ளது.