வாகரையில் வரப்புயர மரநடுகை திட்டத்தின் மூலம் தென்னங்கன்றுகள் வழங்கல்

(த.லோகதக்சன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புச்சாக்கேணி, கதிரவெளி ஆகிய இரு கிராமங்களுக்கு சுவிஸ்லாந்து அன்பே சிவம் சூரிச்சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தினரால் வரப்புயர மரநடுகை திட்டத்தின் மூலம் புதன்கிழமை தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன், மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமூக சேவையாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட அன்பே சிவம் அமைப்பாளர் எஸ்.தனுராஜன், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது இரு கிராமங்களிலும் இருந்து நூறு குடும்பங்களுக்கு கலந்து கொண்ட அதிதிகளால் தென்னங் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

தமிழர் நிலத்தை வளம் நிறைந்த, பொருளாதாரம் நிறைந்த பூமியாக மீண்டும் மாற்றும் நல்லெண்ணத்தில் சுவிஸ்லாந்து அன்பே சிவம் சூரிச்சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் என்பன வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்களில் ஐயாயிரம் தென்னை மரக்கன்றுகளை நாட்டும் திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.