சிறுவர், முதியோரின் உரிமைகளை பேணிப் பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வு பேரணியும் மகஜர் கையளிப்பும்

(சித்தாண்டி நித்தி) வந்தாறுமூலையில் இயங்கிவரும் உள்ளுர் அமைப்புகளின் ஒன்றான பொதுஜய அபிவிருத்தி மன்றத்தினால் இன்யை சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் மற்றும் முதியோரின் உரிமைகளைப் பேணிப் பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வூட்டும் பேணியும் மகஜர் கையளிப்பு நிழ்வும் நடைபெற்றது.

குறித்த நிறுவனத்தின் முன்பாக சுமார் 300க்கு மேற்பட்ட முதியோர்கள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் (வந்தாறுமூலை, பலாச்சோலை, சித்தாண்டி, மாவடிவேம்பு,கொம்hதுறை, களுவன்கேணி என பல கிராமத்திலிருந்து)  ஒன்று கூடி 'எதிர்காலத்தில் சிறுவர், முதியோரின் உர்மைகளை பேணிப் பாதுகாப்போம்', 'சிறுவர்களுக்கு ஏற்படும் துஸ்பிரயோகங்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரச அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களது கடமையையும் ஆகும்' என்ற மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் சுலோங்களை ஏந்திய வண்ணம் வந்தாறுமூலையில் இருந்து ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகம் வரைச் சென்று 'சிறுவர், முதியோரின் உரிமைகளை பேணிப் பாதுகாத்தல்' தொடர்பான மகஜரை பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களிடம் கையளித்தனர். 

மகஜரை ஏற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் 'இன்றை நாளில் இவ்வாறதொரு விழிப்புணர்வு பேரணியை ஏற்பாடு செய்த பொதுஜய அபிவிருத்தி மன்றத்திற்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு கலந்துகொண்ட அனைத்து முதியவர்களுக்கும் நன்றிகள், எதிர்வரும் காலங்களில் பிரதேச செயலகமும் ஏறாவூர்பொலிஸ் பிரிவினரும் இணைந்து முதியோர்கள் மற்றும் சிறுவர்களின் பிரச்சனை தொடர்பாக கூடிய கவனம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவுக்கு பொறுப்பான ஏறாவூர் பொலிஸ் பொறுப்பு அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.