கொழும்பு - மட்டக்களப்பு தனியார் பேரூந்து ஒன்றில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்ட நடாத்துனர்


 கொழும்பிலிருந்து  மட்டக்களப்பை நோக்கி வந்த தனியார் பேரூந்து ஒன்றில் உரிய பேரூந்து நடாத்துனரால் பயணி ஒருவருக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

கடந்த 27.10.2014 அன்று கொழும்பு புறக்கோட்டை தனியார் பேரூந்து நிலையத்திலிருந்து மட்டக்களப்பை நோக்கி புறப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த தனியார் பேருந்தில்   மட்டக்களப்புக்கு வருவதற்காக பயணி ஒருவர் ஏறியுள்ளார்.


குறித்த பயணி மட்டக்களப்பில் தற்போது வசித்து வருபவரும், மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல அரச நிறுவனம் ஒன்றில் கடமை புரிபவரும், இலங்கையிலிருந்து வெளி வரும் பல திரைப்பட நடிகரும், ஒரு ஊடகவியலாளருமாவார்.


இவருக்கு 563 ரூபாய் பிரயாணச் சீட்டு வழங்கப்பட்டு 600 ரூபாய் பணம் பேரூந்து நடாத்துனர் பெற்றுக் கொண்டுள்ளார். மீதிப் பணமும் வழங்கப்படவில்லை.


பின்னர் குறித்த பயணிக்கு 9 ஆம் இலக்கமடைய இருக்கை வழங்கப்பட்டது மாலை 7 மணிக்கு குறித்த பேரூந்து தரிப்படத்திற்குச் சென்று குறித்த பேரூந்தில் பற்றுச் சீட்டு எடுத்துள்ள போதிலும்  இரவு 8.30 மணிக்குத்தான் இப்பேரூந்து புறப்படும் என குறித்த பேரூந்தின் நடாத்துனரினால் கூடப்பட்டுள்ளது.  ஆனாலும் அன்று இரவு 10 மணிக்குத்தான் பேரூந்து பறப்பட்டள்ளது.


இருந்தபோதிலும் 10 மணிக்கு புறக்கோட்டையிலிருந்து புறப்பட்டு வெள்ளவத்தைப் பகுதிக்குச் சென்ற இப்பேருந்து வெள்ளவத்தையில் நடாத்துனர் இறங்கிவிட்டார். புதிதாக பிறிதொரு நடாத்துனர் இக்குறித்த பேரூந்துவிற்கு நடாத்துனராக ஏறியுள்ளார்.


பின்னர் இப்பிரயாணியின் பற்றுச் சீட்டை வாங்கி இந்த இருக்கையினை விட்டு எழுந்து வேறு இருக்கைக்குச் செல்லுமாறும் புதிதாக வந்த பேரூந்து நடாத்துனரால் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு 9 ஆம் இலக்கமுடைய இருக்கையை நான் முற்கூட்டியே பதிவு செய்துள்ளேன் இவ்விருக்கையிலாதான் நான் இருக்கிறேன் என பயணி தெரிவத்துள்ளார்.


இதற்கு குறித்த பயணியின் கன்னத்தில் பேரூந்து நடாத்துனர் ஒங்கி அறைந்து விட்டு நீ யாரிடம் சொன்னாலும் பராவாயில்லை என பேரூந்து நடாத்துனர் கூறியதாக குறித்த பிரயாணி தெரிவித்துள்ளார்.


இவ்விடையம் குறித்து மட்டக்களப்பு பொலிஸில் தான் முறைப்படு செய்துள்ளதாகவும் கன்னத்தில் அறைந்துள்ளதானால் தமக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளதாகவும் குறித்த பிரயாணி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மக்கள் மற்றவரை மதிப்பவர்கள் என்றுதான் கேழ்விப் பட்டிருக்கன்றென் இவ்வாறு கீழ்தரமாக நடந்து கொள்பவர்களும் குறிப்பாக மக்கள் சேவையில் ஈடுபடுபவர்கள் இவ்வாறு அநாகரகமான முறையில் பொது இடங்களில் வைத்து நெயற்படுவது கவலைக்குரியது.

எனக்கு ஏற்பட்ட இச்சம்பவம் இன்னுமொரு பயணிக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என பாதிக்கப்பட்ட பிரயாணி தெரிவிக்கின்றார். இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.