மண்சரிவில் காவு கொள்ளப்பட்வர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்: மனிதாபிமானப் பணிக்கு உதவுங்கள்:கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள்!





பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை பிரதேசத்தில் மண்சரிவால் உயிரிழந்த மக்களுக்காக ஆழ்ந்த அனுதாபங்களை கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துக்கொள்கின்றது.

கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வி.ரி. சகாதேவராஜா மற்றும் செயலாளர் சிவம் பாக்கியநாதன் இணைந்து விடுத்துள்ள ஊடகஅறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;

கொஸ்லந்தை இயற்கை பேரனர்த்தத்தில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை இறையருளால் எஞ்சியிருக்கக்கூடிய நிர்க்கதியான உறவுகளின் வாழ்வியலுக்கு மனிதப்புனிதர்கள் வழிகாட்டவேண்டும்.

அவனின்றி அணுவும் அசையாது. எல்லாம் அவன் செயல். இறைவனின் பிரபஞ்சத்தில் வாழும் நாம் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் கூறியதுபோல் பிறருக்கு உதவிசெய்வது கடமையாகும்.

இலங்கையில் ஆங்காங்கே மனிதாபிமானப்பணிகளுக்காக பல அமைப்புகள் நிறுவனங்கள் முன்வந்து செயலில் இறங்கியுள்ளன.வாழ்த்துகின்றோம்.இவற்றை ஊடகங்கள் வெளிப்படுத்தும்.

அந்தவகையில் மட்டக்களப்பில் இன்று  வெள்ளிக்கிழமை (31) முதல் நாளை; சனிக்கிழமை (01) மாலை 6.00 மணிவரை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அத்தியாவசியப் பொருட்களை சேகரிக்கும் பணி மாவட்டச் செயலகத்தின் பணிப்புரைக்கமைய பொது அமைப்புக்களால் சேகரிக்கப்படவுள்ளன.