'பன்முக புலத்தில் தற்காலப் போக்குகள்' என்ற தலைப்பிலான கருத்துரையும் கலந்துரையாடலும்

கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையின் ஏற்பாட்டில் 'பன்முக புலத்தில் தற்காலப் போக்குகள்' என்ற தலைப்பிலான கருத்துரையும் கலந்துரையாடலும் நேற்றைய தினம் நடைபெற்றது.

இதில், இந்திய நாட்டில் தமிழ் நாடு திருநெல்வேலி தேசிய பொறியியல் கல்லூரி, பேராசிரியர். முஜிபுர் ரஹ்மான் கருத்துரை வழங்கினார்.

மொழித்துறைத் தலைவி திருமதி றூபி வலன்ரீனா பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற கருத்துரையும் கலந்துரையாடலும் நிகழ்வில் அறிமுகவுரையினை மொழித்துறைப் பேராசிரியர். செ. யோகராசா நிகழ்த்தினார்.

பேராசிரியர் முஜிபுர் ரஹ்மான் தேவதூதர்களின் கவிதைகள், மகா கிரந்தம் ஆகிய நாவல்கள், தேவதைகளின் சொந்தக் குழந்தை என்ற சிறுகதைத்தொகுப்பு, மறு வாசிப்பு – மறு சிந்தனை – மறு விளக்கம் கட்டுரைத் தொகுப்பு, பின்னை தலித்தியம் எனும் இஸ்லாமியக் கட்டுரைகள் நூலையும், புனைபெயர் நட்சத்திரவாசி என்ற கவிதைகளுக்கான நூலையுமு; எழுதியுள்ளார்.


கருத்துரையும் கலந்துரையாடலும் நிகழ்வில், மொழித்துறை விரிவுரையாளர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு பல்வேறு இலக்கியம் சார், பன்மைப்புலம்மிக்க கருத்துக்கள் பரிமாறப்பட்டன.