மட்/மண்டூர் 39 அ.த.க. பாடசாலையில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவும்,விருது பெற்ற அதிபரைக் கௌரவித்தல் நிகழ்வும்.

(பழுவூரான்)
ஒரு அடிப்படை வசதிகளற்று இயங்கிக் கொண்டிருக்கும் பின்தங்கிய பாடசாலையின் பரிசளிப்பு விழாவும். குரு பிரதீபா பிரபா விருது பெற்ற அதிபருக்கு பாராட்டு நிகழ்வும் எமது கமராவில் பதிவானது.

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மட்/பட்/மண்டூர் 39 அ.த.க. பாடசாலையில்  2014.10.30 பாடசாலை அதிபர் துரை.சபேசன் அவர்களின் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் வலயக்கல்வி அலுவலக அதிகாரிகளும். பிறபாடசாலை அதிபர்களும். மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

அதிபர் உரையாற்றுகையில்………..
இப்பாடசாலையானது  பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவு கல்விக் கோட்டத்தின் ஒரு எல்லைப்புறப்பாடசாலையாக உள்ளதுடன் அடிப்படை வசதிளன்றிய நிலையில் இயங்கி வருகின்றது. 1958ம் கல்லோயாத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்துடன் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இது ஒரு ஆரம்பப் பாடசாலையாக உள்ளது. இப்பாடசாலையில் இம்முறை புலமைப்பரிசிலுக்கு தோற்றிய மாணவர்களில் அனைத்து மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றள்ளமை குறிப்பிடத்தக்கது. 2015ம் ஆண்டில் ஒரு மாணவர் சித்தியடைய வைப்போம் என்று திடமாகக் கூறினார். காட்டுயானைகளால் எமது பாடசாலை தாக்கத்திற்குள்ளாகுவதாகவும் இம்மாதத்திற்குள் மட்டும் 03 முறை யானைகளால் தாக்கத்திற்குள்ளாகியுள்ளது. பெண் மாணவர்களின் நலன் பேண ஒரு பெண் ஆசிரியர் இன்மையினால் மிகவும் கஸ்டப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

வலயக்கல்விப்பணிப்பாளர் உரையாற்றுகையில்……………
குரு பிரதீபா பிரபா விருதினைப் பெற்ற அதிபர் அவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இங்கே புலமைப்பரிசில் பரீட்சையில் அனைத்து மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றள்ளமையை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன். அடுத்த வருடம் பௌதீக வளங்களான கட்டிடம் எமக்கு வருகின்ற பட்சத்தில் இப்பாடசாலைக்கு முதலாவது வழங்குவதாக தெரிவித்தார்.



















வலயக்கல்விப்பணிப்பாளர்

யானையால் அழிக்கப்பட்ட பலா மரம்
1958ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம்