வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலத்தில் நடைபெற்ற சகோதர சங்கமம் நிகழ்வு

(சித்தாண்டி நித்தி) கிழக்கு மாகாண கல்வி திணைக்களம், கல்குடா வலயக் கல்வி அலுவலகம், மற்றும் GIZ/ESC இணைந்து நடாத்தும் சகோதர சங்கமம் ஆரம்ப நிகழ்வு இன்று சித்தாண்டி-வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலத்தில் மிகவும் சிறப்பான முறையிலே  நடைபெற்றது.  

சகோதர சங்கமம் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக GIZ/ESC தொழிநுட்ப பணிப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருமாகிய திரு.பவளகாந்தன், கல்குடா வலயக்கல்வி பிரதிக்கல்வி பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திருமதி.சாமினி ரவிராஜ், கல்குடா கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.நா.குணலிங்கம், ஏறாவூர்பற்று-2 கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.பொ.சிவகுரு, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய அதிபர் திரு.தினகரன் ரவி, கொம்மாதுறை இராணுவப்பொறுப்பதிகாரி மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள், வருகைதந்த பாடசாலைகளின் ஆசிரியர்கள், வளவாளர்கள், சகோத சங்கமம் நிகழ்வுக்கு கதாநாயகர்களாக மொழி சமய கலாசாரம் கடந்த வருகைதந்து மாணவ மாணவிகள் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர். 


சகோதர சங்கமம் நிகழ்வில் அதிதிகளையும் சகோதர சங்கமம் சிறப்பு விருந்தினர்களாகவும் வருகைதந்த மாணவர்கள் அனைவரையும் கலாசார முறையில் சகோத சங்ககம் நிகழ்வுக்கு அழைத்துவந்தது வந்தாறுமூலை மத்திய மகா வித்தியலய கலாசார அணிவகுப்பு அணியினர். 

நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கள விளக்கேற்றப்பட்டு பதுளை மண்சரிவு அனார்த்தத்தில் உறவுகளை இழந்து நிர்க்கதியாகி நிற்கும் எமது உறவுகளுக்காகவேண்டி ஒருநிமிட அகவணக்கம் செலுத்தபப்ட்டமை குறிப்படத்தக்கது.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் சகோதர சங்கமம் நிகழ்வு 31 திகதியில் இருந்து நவம்பர் 3 திகதி வரை நான்கு(4) நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவிருக்கின்றது. கல்குடா கல்வி வலயத்தில் இரண்டாவது தடவையாக நடைபெறும் சகோதர சங்கமம் நிகழ்வில் இம்முறை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு என இரு மாவட்டங்களிலும் இருந்து 5 பாடசாலைகள் பங்குபற்றலுடன் 80 மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.