மட்டு.கல்வி வலய பாடசாலைகளின் சுகாதார கழகத்தின் பரிசளிப்பு விழா

-(வரதன்)
மட்டக்களப்பு கல்வி வலய  பாடசாலை  சுகாதார கழகத்தின் பரிசளிப்பு விழா மட்  வின்சன்ட் மகளிர் தேசிய உயர்தர பாடசாலையில்  நடைபெற்றது.

மட் வலய  கல்வி  கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா  உதவி சுகாதார வைத்திய அதிகாரி செல்வி கீர்த்திகா மதனழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்

பாடசாலை பருவங்களில் சுகாதாரத்தின் முக்கியத்துவம்  கொண்ட சமூதாயத்தினை உருவாக்கும் நோக்குடன்  செயற்பட்டுவருகின. சிறந்த  கழகங்கள் தெரிவுசெய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.