ricket Fest 2014 கிண்ணத்துக்கான சமரில் கத்தார் பாடுமீன் விளையாட்டு அணி அமோக்க வெற்றி

ricket Fest  2014   கிண்ணத்துக்கான  மென்பந்து போட்டி 31.10.2014அன்று   கத்தார் டோகாவில் அல்சாத் என்னும் இடத்தில் நடை பெற்றது .
பாடுமீன் விளையாட்டு அணியினர்  நாணய சுழற்சியில் வென்று  முதலில்  துடுப்பெடுத்தாடிய  கத்தார் பாடுமீன் விளையாட்டு அணி   10  ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் மட்டும் இழந்து  150  ஓட்டங்கள் குவித்தனர்  .151  ஓட்டங்கள் இலக்கை நோக்கி  C B Q QATAR  களமிறங்கி விளையாடியது.   ஐந்தாவது ஓவரில் 29 ஓட்டங்கள் மட்டுமே பெற்று  அனைத்து விக்கெட்டுக்களும் இழந்து  மிக பெரிய தேல்வியை சந்தித்தது . இவ்  CBQ qatar அணி  கத்தாரின் பல வெற்றி கிண்ணங்களை பெற்று மிகவும் திறமையான அணி என்பது குறிப்பிடதக்கது. கத்தார் பாடுமீன் அணியினர் இந்த ஆண்டுக்கான வெற்றி கிண்ணத்தையும்   ஒரு லெட்சம் இலங்கை ரூபாவையும் தன் வசப்படுத்தியுள்ளது.