உதயபுரம் பாலர் பாடசாலையின் பரிசளிப்பு விழா.

( ரவிப்ரியா )
பெரியகல்லாறு இந்நு இளைஞர் மன்றத்தின் உதயபுரம் பாலர் பாடசாலையின பரிசளிப்பு விழா அண்மையில் இந்நு காலாசார மண்டபத்தில் தலைவர் த.தனம்ஜெயராஜா தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பிரதம விருந்தினராக, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசாவும், விசேட விருந்தினராக முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனசுந்தரமும், சிறப்பு விருந்தினராக எஸ்.இராதாகிருஸ்ணனும், கொளரவ அதிகளாக சர்வார்த்த ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய கணக்குப்பிள்ளை பெ.அகிலேந்திரனும். ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலய தலைவரும் அதிபருமான எஸ்.பேரின்பராஜா, நாகதம்பிரான் ஆலய தலைவர் கே.நாகராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிதிகள் சம்பிரதாயபூர்வுமாக சிறுவர்களால் மாலை அணுவிக்கப்பட்டு, வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றி, இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. சிறார்களின் குழு நடனங்களும்,தனி நடனங்களும், காவடி ஆட்டமும் அருமையான கலை நிகழ்வுகளாக அமைந்தன அதிதிகளின் உரைகளில், முன்பள்ளி ஆசிரியர்களின் சேவை பற்றி சிறப்பாக பேசப்பட்டது. வேதனம் இன்றி வேலை செய்யும் அவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும், அதற்கான ஒத்துழைப்பை அனைவரும் வழங்க வேண்டுமெனவும்,  இதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அதிதிகளால் சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் இப் பாலர் பாடசாலைக்கு, பொன் செல்வராசா எம.;பி செய்த நிதி உதவிகளுக்காக அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.