சித்தாண்டி திருகோணமலை பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது !

(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் மாவடிவேம்பு இருந்து சித்தாண்டி வரைக்குமான குறிகிய இடங்களினூடான தரைவழிப்போக்குவரத்து தடைப்பட்டதன் காரணமாக இவ் வீதியில் தோணி மற்றும் படகுகளைத்தான் காணக்கூடியதாக இருக்கின்றது.

கழுத்துக்கு மேல் பல இடங்களில் உயர்ந்து நிற்கின்றது. இதனால் வாகனப் போக்குவரத்துக்கு மாற்று வழி பயன்படுத்தப்படுகின்றது.

ஒரு சில கனரக வாகனங்கள் செல்கின்றன நிலையில் சிறிய வாகனங்கள் திரும்பிச் செல்கின்றதை காணக்கூடியதாக இருக்கின்றது.

மக்கள் வீடுகளிலுள்ள பொருட்களை படகு மற்றும் சிறிய தோணிகளைப் பயன்படுத்தியும் உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தியும் பொருட்களை பொருட்களை பாதுகாப்பான இடங்களுக்குச் கொண்டு செல்கின்றனர்.

தங்களின் வீட்டுக்குள்ளே வெள்ள நீரில் குளிக்கும் சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரைää சித்தாண்டி மட்டக்களப்பு பிரதான வீதியிலும் தமது ஆசைகளை விட்டு வைக்கவில்லை பிரதான வீதியிலும் நீச்சல் பேராரறு.
இதேவேளை சந்திவெளி இறங்கு படகுப்பாதை தற்பொழுது மட்டக்களப்பு திருகோணமலை சந்திவெளி பிரதான வீதியில் தனது சேவையினை மேற்கொண்டு வருகின்றது.

பிரதான வீதியுடாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடச்சென்ற மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதன் செல்வதையும் காணலாம்.