மட்டக்களப்பு மாவட்டதில் வெள்ள அனர்த்தினால் மூன்று இலட்சம் பேர் பாதிப்பு

(பேரின்பராஜா சபேஷ்) மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக 88 ஆயிரத்து 925 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7794 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 608 பேர் இடம்பெயர்ந்து 78 இடைதங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 7ஆயிரத்து 203 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 985 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 ஆயிரத்து 796 குடும்பங்களைச் சேர்ந்த போர் 9 ஆயிரத்து 898 இடம்பெயர்ந்து 19 இடைதங்கல் முகாம்களில் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 7ஆயிரத்து 276 குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 403 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 173 குடும்பங்களைச் சேர்ந்த  728 போர் இடம்பெயர்ந்து 2 இடைதங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

கோறளைப்பற்று செயலாளர் பிரிவில் 6 ஆயிரத்து 744 குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரத்து 783  பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 442 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 316 பேர் இடம்பெயர்ந்து 5 இடைதங்கல் முகாம்களில்; தங்கியுள்ளனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 7ஆயிரத்து 329 குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 483 குடும்பங்களைச் சேர்ந்த  1188 போர் இடம்பெயர்ந்து 6 இடைதங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 4 ஆயிரத்து 620 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரத்து 148 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 31 போர் இடம்பெயர்ந்து 12 இடைதங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 12 ஆயிரத்து 376 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 913 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரத்து 160  குடும்பங்களைச் சேர்ந்த  5 ஆயரத்து 786 போர் இடம்பெயர்ந்து 15 இடைதங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 9 ஆயிரத்து 503 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 211  குடும்பங்களைச் சேர்ந்த  757 போர் இடம்பெயர்ந்து 3 இடைதங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 41 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 787 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 15 குடும்பங்களைச் சேர்ந் 72 போர் இடம்பெயர்ந்து 1இடைதங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 15 ஆயிரத்து 141 குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்து 224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 450 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 146  பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 165   குடும்பங்களைச் சேர்ந்த  577 போர் இடம்பெயர்ந்து 3 இடைதங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 603 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 902 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 310  குடும்பங்களைச் சேர்ந்த   ஆயிரத்து 140 போர் இடம்பெயர்ந்து 4 இடைதங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

மண்முனை தென்கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 6 ஆயிரத்து 99 குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆயிரத்து 239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 41  குடும்பங்களைச் சேர்ந்த  147 போர் இடம்பெயர்ந்து 2 இடைதங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

பொரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 47குடும்பங்களைச் சேர்ந்த 3ஆயிரத்து 340 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 265  குடும்பங்களைச் சேர்ந்த  965 போர் இடம்பெயர்ந்து 1 இடைதங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 8 ஆயிரத்து 493 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 285  குடும்பங்களைச் சேர்ந்த  994 போர் இடம்பெயர்ந்து 5 இடைதங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

இதுரை ஆயிரத்து 877 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 5ஆயிரத்து 500 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.