கொழும்பில் நடைபெற்ற தேசிய புத்தாக்கத்திற்கான விருதுவிழாவில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவர்களுக்கு விருதுகள்

(சித்தாண்டி நித்தி) சகஸக் நிமவும் தேசிய புத்தாக்கத்திற்கான விருது விழாவில் சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்து ஸ்மாட் ஸ்பிரே கருவியை கண்டு பிடித்த இரு மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

கொழும்பு BMICH மண்டபத்தில் செவ்வாக்கிழமை (16) நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் ச.கேனுஷசன் கே.கேதீஸ்வரன் ஆகிய இளம் கண்டுபிடிப்பு மாணவர்களுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. 

விருது விழாவிற்கு பாடசாலையின் முன்னாள் அதிபரும் தற்போது கல்குடா பிரதிக்கல்வி பணிப்பாளருமாகிய (கல்வி முகாமைத்துவம்) தினகரன் ரவி உட்பட ஸ்மாட் ஸ்பிரே கருவி கண்டுபிடிப்பதற்கு வழிகாட்டல் ஆசிரியராக இருந்த முரளிதன் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் பல்வேறு துறைகளில் தனது வளர்ச்சிப்போக்கை வெளிக்காட்டிவரும் இதேவேளை இந்த ஸ்மாட் ஸ்பிரே கண்டு பிடிப்பு தேசியமட்ட விருது பெற்றமை பாடசாலைக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றியென பாடசாலைசார் சமூகம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.