வாகரை பிரதேசசபை செயலாளரினால் பிரதேச செயலாளரிடம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையளிப்பு!

2910 குடும்பங்கள் இடம் பெயர்வு, 738 வீடுகள் பாதிப்பு
(அசுவத்தாமா)
கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதனால் பிரதேசத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதனால் பல மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. தொடர்ந்;து மழை பெய்து வருவதனால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பிரதேசமக்கள் பாடசாலைக் கட்டிடங்களிலும், பொது இடங்களிலும் தஞ்சமடைந்துள்ளதையும் காணமுடிந்தது.  தட்டுமுனை மாணிக்க விநாயகர் வித்தியாலயத்தில் 365 குடும்பங்களைச் சேர்ந்த 1809 நபர்களும் வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் 562 குடும்பங்களைச் சேர்ந்த 1854 நபர்களும் பால்சேனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் 461 குடும்பங்களைச் சேர்ந்த 1558 நபர்களும்  கதிரவளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் 205 குடும்பங்களைச் சேர்ந்த 717 நபர்களும் சல்லித்தீவு முன்பள்ளியில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 55 நபர்களும் ஏனைய சிறிய முகாம்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 2910 குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பதனாயிரத்தி எழுநூற்று எழபத்தாறிக்கு மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ளதாக பிரதேச செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பிரதேச செயலாளர் செல்வி.இராசநாயகம் இராகுலநாயகி அவர்கள் கண்காணித்து வருகின்றார். வாகரை பிரதேச சபை குடிதண்ணீர்ääசுகாதார வசதி போன்ற அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்துவதில் மிகத் துரிதமாக செயற்பட்டதனையும் அவதானிக்க முடிந்தது. 
பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்காக ஒருதொகுதி அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, சீனி, பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்கள் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் செயலாளர் திரு.சிவலிங்கம் இந்திரகுமார் அவர்களினால் பிரதேச செயலாளர் இராசநாயகம் இராகுலநாயகி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந் நிகழ்வில் ஊரியன்கட்டு கிராமசேவையாளர் முஹமட் அஸ்கர் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் செ.அசோகலிங்கம்ää பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.நா.கருணைநாதன் மற்றும் பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.