மீள்குடியேற்றப் பிரதியமைச்சரால் நிவாரணப்பணிகள் முன்னெடுப்பு

(எஸ்.விது)
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் வௌ்ள அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வசதிகள் வழங்கப்பட்டுவருவதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கிரான்,சந்திவெளி, கோரகல்லிமடு, வந்தாறுமூலை பிரதேசத்தில் வௌ்ளத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குளங்கள் திறந்து விடப்பட்டுள்ளதாலும் கடும் மழை கரணமாக ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கினால்  வந்தாறுமூலை,மாவடிவேம்பு, கிரான்,சித்தாண்டி, கோரகல்லிமடு, சந்திவௌி, முறக்கொட்டாஞ்சேனை, சுங்காங்கேணி,முறாவோடை மற்றும் கோரகல்மடு போன்ற பிரதேசங்களிலும் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் பொது கட்டடங்களிலும் தங்கியுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷே அவர்களிடம்  பேசி அவரின் உத்தரவுக்கமைய இம் மக்களுக்கான நிவாரணப்பணிகளை மேற்கொண்டுவருகின்றோம்.


முருக்கந்தீவு,பொண்டுகள்சேனை போன்ற கிராமங்களிலிருந்த மக்களை இராணுவத்தின் உதவியுடன் பாதுகாப்பான இடத்தில் அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்கு சமைத்த உணவுகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாது.

என அவர் மேலும் தெரிவித்தார்.

முகாம்களில் தங்கியுள்ளோரை இன்று மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் நேரடியாக சென்று பாரவையிட்டு மக்களுக்கு அவசரமாகத ;தேவையாகயிருந்த படுக்கை விரிப்புக்கள், போர்வைகள், குடிநீர் வகைகள், பால்மா, பிஸ்கட், அரிசி, மா, சமையல் பொருள்கள், புடவைகள் என பல்வேறு பட்ட பொருள்களையும் உடனடியாக விநியோகித்தார்.