ஏறாவூரில் புகையிரதத்தை மறித்து மக்கள் போரட்டம்

(எம்.எஸ்.எம்.ஸப்றாஸ் )
ஏறாவூரில் நேற்று (17) மதியம் புகையிரதத்தை மறித்து  பொதுமக்கள் நடாத்திய ஆர்ப்பாட்டம் நகர சபைத் தவிசாளர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் தலையீட்டையடுத்து கைவிடப்பட்டது.

இதேவேளை நேற்று முன்தினமே இவ்விதிகளுக்கான தற்காலிக பாதை சீரமைப்புப் பணிகளை அலி ஸாஹிர் மௌலானா எடுத்திருந் நிலையில் நேற்று காலை இதனை மீண்டும் தோன்டுவதற்கு புகையிரத ஊழியர்கள் முயற்சித்த வேளையிலயே பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் முரன்பாடுகள் ஏற்பட்டது.





இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த ரயில்வே திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் பொதுமக்கள் முன்னிலையில் செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவுடன் நடாத்திய பேச்சுவார்த்தையில் பொதுமக்களின் கோரிக்கைக்கு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்து உடனடி நடவடிக்கையினையும்  முன்னெடுத்ததனர்.
இதனைத்தொடர்ந்து மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து புகையிரதம் பயணிக்க இடமளித்ததை அவதானிக்கமுடிந்தது.

ஏறாவூர்- மிச்நகர் மீராகேணி மற்றும் தாமரைக்கேணி ஆகிய பகுதிகளிலுள்ள ரயில்வே தண்டவாளங்களை ஊடறுத்துச் செல்லும் வீதிகளை தோண்டிவிடுவதன்மூலம் போக்குவரத்திற்குத் தடையை ஏற்படுத்த ரயில்வே திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த குறுக்கு வீதிகள் தொடர்ந்தும் பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தக் கூடியதாகவே ரெயில் பாதை சீரமைப்புப் பணி;களை மேற்கொள்வது.  இந்த குறுக்கு வீதிகளைப் புனரமைப்புச் செய்யப்படுவதுடன்
பாதுகாப்புக்  கடவை அமைக்கப்பட்டு ஏனைய இடங்களைப்போன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவது என்ற விடயங்களில் இணக்கம் காணப்பட்டதுடன் உடனடி நடவடிக்கையும் முன்னெடுக்கபப்ட்டது.

ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழும் குறித்த பிரதேசங்களுக்கான இவ்வீதிகள் மிகநீண்டகாலமாக போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது இவ்வீதிகளில் ரெயில்வே தண்டவாளங்களின் இருமருங்கையும் தோண்டிவிடுவதனால் பொதுமக்கள் போக்குவரத்துச் செய்யமுடியாதநிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்தலத்தில் நின்றவாறு அலிஸாஹிர் மௌலானா ரெயில்வே போக்குவரத்து அமைச்சர் மற்றும் பொது முகாமையாளர் போன்றோருடன் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு பொது மக்களது கோரிக்கைகள் குறித்து எடுத்துக்கூறினார்.