பெரியகல்லாறு ஜோன்டி பிறிற்றோ கழகத்தின் 40வது ஆண்டு நிறைவு விழா

( ரவிப்ரியா )
பெரியகல்லாறு ஜோன்டி பிறிற்றோ கழகத்தின் 40வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வின் போது தேசிய மற்றும் கழக கொடிகள் ஏற்றி வைக்கப்படுவதையும்.
புனித அருhனந்தர்  ஆலய பங்குத் தந்தை அருட்பணி பயஸ் பிரசன்னா மங்கல விளக்கேற்றி வைப்பதையும், பிரதம அதிதியான பிரதேச செயலாளார் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், அதிவிசேட அதிதி பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்.ஞானராஜா ஆகியோரும் அதிதிகளும் பரிசில்களை வழங்கிவைத்தனர்.

 குறிப்பாக இவ்வாண்டு புலமைப் பரில் பரீட்சையில் சித்தியடைந்த பெரியகல்லாற்றில் உள்ள பாடசாலைகளின் மாணவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் பல்கலைக்கழக புகுமுக மாணவருக்கும், கிரிக்கற் சுற்றுப் போட்டியில் முதற் தடவையாக கிண்ணத்தை சுவீகரித்தமைக்கான கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது. முன்னாள் பங்குத் தந்தை அருட்பணி ஜி. அம்புறோஸ் அவர்களுக்கும் விசேடமாக நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்படடது. சிறுவர்களின் நடனங்கள் ரசிக்கும் படியாக இருந்த போதும் எமது கலாசார பாரம்பரியங்களுடன் ஒன்றிப் போகாதது பற்றி அமைப்பாளர்கள் எதிர்காலத்தில் சிந்திப்பது அவசியமாகும்.

  அதிதிகள் தங்கள் உரைகளில் பெற்றோரின் தொலைக்காட்சி நாட்டம் சிறார்களின் கல்வியைப் பாதிப்பதாக குறிப்பிட்டனர். எனவே இது குறித்து பெற்றோர் விழிப்புணர்வுடன் செயற்பட்டு வீட்டில் பிள்ளைகள் படிப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.