புனித மிக்கேல் தேசிய பாடசாலை நுளைவாயிலில் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

(சிவம்)
மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலை நுளைவாயிலில் மாணவர்களின் பெற்றேர் மற்றும் பழைய மாணவர்கள் இன்று திங்கட்கிழமை (26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலையின் அதிபராக அருட்தந்தை ரஜீவன் இருதயராஜ் உள்ள நிலையில் ஆர். வெஸ்லியோ வாஸ் அதிபராக வர முயற்சிப்பதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


இப் பாடசாலையின் ஆரம்பம் முதல் கிறிஸ்தவ பாதிரியார்கள் நடத்திய நிலையிலே அரசிக்கு பாரப்படுத்தப்பட்டது. தற்போது கல்லூரியில் கல்விச் செயல்பாடுகள் பாதிப்படைந்த நிலையில் மாணவர்களை ஊக்கப்படுத்திச் செல்வதற்கு இப்பாடசாலைக்கு அருட்தந்தையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் கல்லூரியின் வளர்ச்சியில் ஆரம்ப காலமிருந்தே பணியாற்றி வரும் அருட்தந்தை ரஜீவனே பொருத்தமானவர் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையில் கணித ஆசிரியராக மட்டும் இருநது சேவை புரிந்த ஆர். வெஸ்லியோ வாஸ்சை விட பாடசாலை நலனடகருதி செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரஜீவனே பொருத்தமானவர் எனத் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்களின் கல்வியைச் சீரளிக்காதே, கிறிஸ்தவ பாதிரியாரான ரஜீவனே வேண்டும் என்ற வாசகங்களை தாங்கயவ ண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுவ்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பொன் செல்வராசா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். பிரசன்னா ஆகியோர் வருகை தந்து நிலமையை கேட்டறிந்தனர்.